Wegovy: உடல் எடையை குறைக்க உதவும் நீரிழிவு மருந்து! வைரலாகும் எலோன் மஸ்க் ட்வீட்!

Elon Musk On Weight Loss: பல நீரிழிவு மருந்துகள் உங்கள் எடையைக் குறைக்க உதவும் திறன் பெற்றவை என்ற செய்தி சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகின்றன. அதற்கு காரணம் எலோன் மஸ்க் போட்ட ஒரு ஒற்றை டிவிட்டர் பதிவு தான்!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 25, 2022, 02:31 PM IST
  • எலோன் மஸ்கின் உடல் எடை குறைப்பு டிப்ஸ்
  • சமூக ஊடகங்களில் தீயாக வைரலாகும் எலோன் மஸ்க்
  • நீரிழிவு மருந்துகள் உடல் எடையை குறைக்கும்?!
Wegovy: உடல் எடையை குறைக்க உதவும் நீரிழிவு மருந்து! வைரலாகும் எலோன் மஸ்க் ட்வீட்! title=

Weight Loss Tips From Elon Musk:  வீகோவி (Wegovy) என்ற ஊசி மருந்து, Ozempic மற்றும் பல நீரிழிவு மருந்துகள் உங்கள் எடையைக் குறைக்க உதவும் என்ற செய்தி  சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் அளவைக் குறைப்பது இந்த மருந்துகளின் முதன்மைத் திறன் என்றாலும், எடை இழப்பையும் இந்த மருந்துகளை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படுமாம். இந்த செய்தியை எலோன் மஸ்க் ட்வீட் செய்தததும், அது சமூக ஊடகங்களில் வைரலாகிறது. எலோன் மஸ்க்கின் ட்விட்டர் ஒப்பந்தம், கிரிப்டோகரன்ஸிகள் அல்லது சர்வதேச மோதல்கள் பற்றிய டிவிட்டர் பதிவுகள் இதுவரை வைரலாகியுள்ளன. முதன்முறையாக உடல் எடை குறைப்பு மருந்து தொடர்பான மஸ்கின் ட்வீட் வைரலாகி உள்ளது.

நீரிழிவு எதிர்ப்பு மருந்து பற்றிய எலோன் மஸ்கின் சமீபத்திய ட்வீட் பரவலாக வைரலாகிறது. நீரிழிவு நோய்க்கான மருந்தான வீகோவி, "உறுதியாக மற்றும் ஆரோக்கியமாக" தோற்றமளிக்கும் தனது ரகசிய ஆயுதம் என மஸ்க் ட்வீட் செய்திருந்தார்.

ஓஸெம்பிக் என்பது செமகுளுடைட்டின் பிராண்ட் பெயர், இது இன்க்ரெடின்கள் அல்லது குடல் ஹார்மோன்கள் எனப்படும் மருந்துக் குழுவின் ஒரு பகுதியாகும், வெகோவி என்பது செமகுளுடைட்டின் அதிக டோஸ் ஆகும். மஸ்க்கின் ட்வீட்டால், இந்த மருந்துகள் பிரபலமாகிவிட்டன. இந்த மருந்துகளை தற்போது பலரும் கூகுளில் தேடிவருகின்றனர்.  எலோன் மஸ்க் பதிவிட்ட பிறகு, இந்த மருந்தை சமூக ஊடக தளமான டிக்டோக்கில் 350 மில்லியன் பேர் தேடியுள்ளனர்.  

மேலும் படிக்க | ஸ்டார்லிங்க் இன்டர்நெட் செலவு தொடர்பான கோரிக்கையை திரும்ப பெற்றுவிட்டோம்: எலோன் மஸ்க்

உடற்பயிற்சியும் உணவுமுறையும் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமானது என்றாலும், எடை இழப்புக்கு கூடுதல் உதவி தேவைப்படுகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களில், அமெரிக்காவில் உடல் பருமன் 30.5 சதவீதத்திலிருந்து 41.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. மருத்துவர்கள் மருந்தை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் மற்றும் உடல் பருமனுக்கு எதிரான போராட்டத்தில் இது பயன்படுத்தப்படலாம் என்று நம்புகிறார்கள்.

Tirzepatide என்பது மற்றொரு இன்க்ரெடின் ஆகும், இது சமீபத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) மே 2022 இல் நீரிழிவு மருந்தாக அங்கீகரிக்கப்பட்டது. மருந்து சோதனைகளில் பங்கேற்றவர்களுக்கு, உணவு உண்பதில் விரைவிலேயே திருப்தி ஏற்படுவதையும், இரைப்பை காலியாகும் நேரத்தில் தாமதம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

வயிற்றில் இருந்து சிறிய மற்றும் பெரிய குடல்களுக்கு உணவு மெதுவாக நகரும் போது, ​​நீண்ட நேரம் பசி எடுப்பதில்லை, ​​​​இதன் விளைவாக எடை குறைகிறது.

மேலும் படிக்க | செண்ட் வாங்கலையோ செண்ட்! கூவிக்கூவி விற்கும் எலோன் மஸ்க்

இருப்பினும், காலவரையற்ற காலத்திற்கு இன்க்ரெடின்கள் எடுக்கப்பட வேண்டும் மற்றும் இந்த மருந்தின் பிற பக்க விளைவுகளான, உடல் வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை கவலைகள் ஏற்படுத்துபவை. கூடுதலாக, இவற்றின் விலையும் மிகவும் அதிகமாகும். இந்த  ஊசி மருந்துகளின் விலை மாதத்திற்கு $1,000 ஆகும்.

எனவே, நீண்ட காலத்திற்கு இத்தகைய மருந்துகள் எடை இழப்பில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் விவாதிக்கும் அதே வேளையில், அவை ஏதேனும் பெரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தினால் என்ன செய்வது?

மேலும் படிக்க | கோவிடிலும் தில்லுமுல்லு செய்த டிரம்ப்! கிடுக்கிப்பிடி விசாரணையில் அமெரிக்க முன்னாள் அதிபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News