தவறான உணவுகளை அதிகமாக உட்கொள்வது நம் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும், கலோரிகள் அதிகமாகவும் உள்ள உணவுகளை சாப்பிடுவது எடை கூடுவதற்கு வழிவகுக்கும். இது பல நோய்களையு ஏற்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செறிவுற்ற கொழுப்பு கொண்ட உணவுகள் மற்றும் சோடியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் என பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். உடல் பருமன் உட்பட பல பிரச்சனைகள் உருவாகும்.


உடலின் அடிப்படை நிலைகளான வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்களான அவற்றை நாம் உண்ணும் உணவுகள் மாற்றிவிடுகின்றன. 


இவை சமச்சீரற்ற நிலையில் மாறும்போது பல்வேறு நோய்களை உருவாக்குகின்றன. இவை, தினசரி அடிப்படையிலும், வெவ்வேறு பருவங்களிலும் ஒரு சாதாரண தாள சுழற்சியைக் கொண்டிருக்கும்.


மேலும் படிக்க | எந்த பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்?


கோடைக்காலத்தில் வாதம் பித்தம் கபம் என அனைத்தையும் சமநிலைப்படுத்த ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்


கோடைக் காலத்தில் செரிமானத் திறன் போதுமானதாக இருக்காது என்பதால், எளிதில் செரிமாணமாகும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.


கோடையில் திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் இவை உடலில் உள்ள திரவ இழப்பையும் அத்துடன் கப தோஷத்தையும் சீராக்க உதவுகிறது.


மண் பானைகளில் சேமிக்கப்படும் நன்னீர், பழச்சாறுகள், மோர் மற்றும் இளநீர் போன்ற ஏராளமான திரவங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.



தானியங்களில், கோதுமை, சிவப்பு அரிசி மற்றும் பச்சைப்பயறு ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். 


காய்கறிகளில் புடலங்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், வெள்ளரி  உட்பட ஆகியவை இந்த பருவத்தில் சாப்பிடுவது சிறந்ததாக கருதப்படுகிறது, ஏனெனில் அவை உடலின் வலிமையை மீட்டெடுக்க உதவுகின்றன.


தர்பூசணி, பீச், பிளம்ஸ், மாம்பழம், திராட்சை, பேரிக்காய், அவகேடோ மற்றும் பெர்ரி போன்ற பழங்கள் சிறந்தது. உடலின் நச்சுத்தன்மையை நீக்க மூலிகை தேநீர் நல்லது.


மேலும் படிக்க | RBI Monetary Policy: ரெப்போ விகிதங்களில் மாற்றம் இல்லை, 4% விகிதம் தொடரும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR