எந்த பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்?

தினசரி மூன்று பழங்களுக்கு மேல் சாப்பிட்டு வந்தால் உடலில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Apr 9, 2022, 04:35 PM IST
  • பழங்களில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகமாக உள்ளது.
  • ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை குறித்து தவறான தகவல்கள் பரவி வருகிறது.
  • அதிகளவு பழங்கள் குறைந்த கலோரியை தான் கொண்டுள்ளது.
எந்த பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்?  title=

பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய ஏராளமான ஊட்டசத்துக்கள் நிரம்பியுள்ளன.  அதிலும் குறிப்பாக பழங்களில் கனிமங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை அதிகமாக உள்ளது.  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் எப்போதும் மருத்துவரை அணுக வேண்டியதில்லை என்கிற பழமொழிக்கேற்ப தினமும் பழங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் அதிக நன்மைகளை பெறமுடியும்.  ஆனால் தற்போது ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவு முறை குறித்து தவறான தகவல்கள் பரவி வருகிறது.

மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் இந்த 5 பழங்களை கட்டாயம் சாப்பிடலாம்

சிலர் காலை நேரம் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் தான் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் என்று நம்புகின்றனர், அதே நேரம் சிலர் உணவிற்கு பின்னர் தான் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நினைத்து கொள்கின்றனர்.  ஆனால் எந்த நேரத்தில் பழங்களை சாப்பிடுவது சிறந்தது என்றால் எப்போது உணவு உண்பதற்கு முன்னதாகவே பழங்களை சாப்பிடுவது சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

fruits

அதிகமாக சாப்பிடுங்கள், குறைவான எடையில் இருங்கள் என்பது தான் மருத்துவர்களின் தாரக மந்திரமாக உள்ளது.  அதிகளவு பழங்கள் குறைந்த கலோரியை தான் கொண்டுள்ளது, இதனால் வயிறு நிறைவு ஏற்படுவதோடு உடல் எடையும் அதிகரிக்காது.  ஒரு நாளைக்கு மூன்றுக்கும் குறைவான பழங்களை சாப்பிட்டால் பக்கவாதம் போன்ற சில நோய்கள் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  அதனால் தினமும் அதிகளவிலான பழங்களை உண்ண வேண்டும்.  மேலும் காலை நேரத்தில் நீங்கள் பழங்கள் சாப்பிடுவது அந்த நேரத்திற்கு மற்றும் உங்கள் உடலுக்கு அது ஆற்றலை கொடுக்கும், மாலை நேரத்தில் உங்களுக்கு சோர்வு ஏற்படும்.

fruits

டயட் இருப்பவர்கள் உணவின் போது ஒன்று அல்லது இரண்டு பழங்களை எடுத்துக்கொள்வது கண்டிப்பாக நன்மையை அளிக்கும் என்று மருத்துவர்க கூறுகின்றனர்.  மேலும் ஃப்ரூட் சாலட், ஸ்மூத்தி, டேட் சிரப் டெசர்ட்ஸ், ட்ரை ஃப்ரூட் லட்டுக்கள், ஆப்பிள் பை போன்றவற்றை சாப்பிடலாம், இவை ருசியாக இருப்பதோடு உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

மேலும் படிக்க |கொலஸ்ட்ராலை கரைக்கணுமா? இவற்றை உடனே உங்கள் உணவில் சேர்க்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News