Ayurvedic Agni Tea: அக்னி தேநீர் இருக்கும்போது வேறு டீ எதற்கு?
ஆயுர்வேதத்தின்படி, உடலில் அக்னியின் பணி முக்கியமானது. உடலில் உள்ள அக்னியே, உணவை ஆற்றலாக மாற்றுகிறது. அக்னி தேநீர் என்பது நமது செரிமான திறனைக் கட்டுப்படுத்தவும் தூண்டவும் உதவும் ஒரு எளிய பானமாகும்,
இந்த ஆயுர்வேத ‘அக்னி தேநீர்’ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயப்பது. அக்னி தேநீர் பல ஆரோக்கியமான நன்மைகளை வழங்கும் பொருட்களின் கலவையாகும். நாம் வழக்கமாக குடிக்கும் தேநீரைப் போல உடலுக்கு தீங்கு செய்யாத ஆரோக்கியமான தேநீர் இது.
அக்னி என்பது தீயை அதாவது நெருப்பைக் குறிக்கும். ஆயுர்வேதத்தின்படி, உடலில் அக்னியின் பணி முக்கியமானது. உடலில் உள்ள அக்னியே, உணவை ஆற்றலாக மாற்றுகிறது.
அக்னி தேநீர் என்பது நமது செரிமான திறனைக் கட்டுப்படுத்தவும் தூண்டவும் உதவும் ஒரு எளிய பானமாகும், இது செரிமான உறுப்பின் அனைத்து செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது.
Also Read | அறுகம்புல் ஜூஸ் குடித்தால் ஆயிரம் நன்மை! அதில் சில...
அக்னி தேநீரின் ஆரோக்கியமான கலவை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. நாம் உண்ணும் உணவு சக்தியாக மாற்றப்படும் செயல்முறையான வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடல் கலோரிகளை எரிக்கும் முக்கியமான காரணியாகவும் மாறுகிறது.
‘அக்னி டீ’உடல் எடையை குறைக்கிறது
குடலை சுத்திகரிப்பதோடு, தவறான பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலின் நச்சுத்தன்மையை நீக்கிகிறது. இப்படி பல நன்மைகளைக் கொண்ட அக்னி தேநீரை எப்படி தயாரிப்பது தெரியுமா?
Also Read | Maggi ஆரோக்கியமான உணவில்லை என Nestle ஒப்புக்கொண்டது
தேவையான பொருட்கள்
750 மிலி தண்ணீர்
மிளகு
இஞ்சி
கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
இரண்டு தேக்கரண்டி வெல்லம் அல்லது கருப்பட்டி
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றை எப்போதும் சூடுபடுத்தக் கூடாது. எனவே அதை தவிர்த்து, மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் தண்ணீரை சேர்த்து அடுப்பில் வைத்து 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின்னர் அதை இறக்கி வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து மிதமான சூட்டில் குடிக்கவும்.
Also Read | சூப்பரான வெள்ளரிக்காய்ப் பாயசம் செய்வது எப்படி? இப்படித்தான்…
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR