கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆயுர்வேத உணவுகள்: இதயத்திலிருந்து முழு உடலுக்கும் ரத்தத்தை எடுத்துச் சென்று மீண்டும் இதயத்துக்கு அனுப்புவதே நமது தமனிகளின் செயல்பாடு. ஆனால் ரத்தக் குழாய்களில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்தால், அடைப்பு ஏற்படுகிறது. பின்னர் இதய தமனி நோய் ஏற்படலாம். குறிப்பாக மாரடைப்பு ஆபத்து மிக அதிகமாக உள்ளது, ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். அதே போல் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ், சில ஆயுர்வேத உணவுகள் மூலம், கெட்ட கொலஸ்ட்ராலைக் எரிக்கலாம் என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆயுர்வேத உணவுகள்


பூண்டு


காலையில் பூண்டை பச்சையாக மென்று சாப்பிட்டால், தமனிகளில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு வெகுவாகக் குறையும் என்று நிகில் வாட்ஸ் கூறினார். மேலும், ஒரு டீஸ்பூன் நசுக்கிய பூண்டில், ஒரு டீஸ்பூன் இஞ்சியை கலந்து தினமும் சாப்பிட ஆரம்பித்தால் அதன் பலன் சில நாட்களிலேயே தெரிய ஆரம்பிக்கும் என உறுதி கூறுகிறார்.


மேலும் படிக்க | Health Alert: இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ பழங்கள்!


தனியா


தனியாவை மசாலாப் பொருளாகப் பயன்படுத்துகிறோம். உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் தனியாவில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. தனியா போட்டு கொதிக்க வைத்த நீரைக் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைவது மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுத்தன்மையும் குறையும்.


வெந்தயம்


உணவின் சுவையை அதிகரிக்க பொதுவாக வெந்தயத்தை பயன்படுத்துகிறோம். இது  கொலச்ஸ்டிராலை எரிக்கும் தன்மை கொண்டது, நீரிழிவு நோயாளிக்கும் இது அருமருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் அதிகபட்ச பலனைப் பெற விரும்பினால், அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்ததும், வடிகட்டிய பின் குடிக்கவும்.


தேன்


தேன் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இதனை எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், கொலஸ்ட்ராலை எரிப்பதோடு மட்டுமல்லாமல், இடுப்பு மற்றும் தொப்பை கொழுப்பைக் குறைக்கலாம். இந்த ஆயுர்வேத தீர்வை சில நாட்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தால், பலன் நிச்சயமாகத் தெரியும்.


மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!