கொழுப்பை கரைத்து... இஞ்சி இடுப்பழகை பெற உதவும்... சில அற்புத ஆயுர்வேத மூலிகைகள்
சில ஆயுர்வேத மூலிகைகள், உணவு பழக்கங்கள் மூலம் உடல் பருமனை மிக விரைவில் குறைக்கலாம். எடை அதிகரிப்பிற்கு நமது மந்தமான வளர்சிதை மாற்றமும் முக்கிய காரணம். உடலில் உள்ள வாதம் பித்தம் மற்றும் கபத்தை சீர் செய்யும் முறையிலான, ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வைப் பெறலாம்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, உடல் பருமன் தொப்பை கொழுப்பு என்பது இன்று இளைஞர்கள் , வயதானவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. போதுமான உடற்பயிற்சி இல்லாதது, நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையில் வேலை பார்ப்பது என உடல் எடை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. உடல் பருமன் தொப்பை மிக எளிதாக வந்து விடும் ஆனால், அதனை குறைக்க படாதபாடு பட வேண்டும். சில ஆயுர்வேத மூலிகைகள், உணவு பழக்கங்கள் மூலம் உடல் பருமனை மிக விரைவில் குறைக்கலாம். எடை அதிகரிப்பிற்கு நமது மந்தமான வளர்சிதை மாற்றமும் முக்கிய காரணம். உடலில் உள்ள வாதம் பித்தம் மற்றும் கபத்தை சீர் செய்யும் முறையிலான, ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வைப் பெறலாம்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பரவலாக அறியப்படுகிறது. தொப்பை கொழுப்பைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி எடை குறைக்க (Weight Loss Tips) உதவும் இலவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைத்த நீரை அருந்துவது பலன் அளிக்கும்.
திரிபலா
திரிபலா என்பது ஆயுர்வேதத்தில் உள்ள ஒரு பயனுள்ள மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளை குறிப்பிட்ட அளவில் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்தான இது, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். தொப்பை கொழுப்பை கரப்பதில், திரிபலாவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | விமான நிலையம் அருகில் வசிப்பவரா... ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கூறும் அதிர்ச்சித் தகவல்
மஞ்சள்
இயற்கையிலேயே உஷ்ணத்தன்மை கொண்ட மஞ்சள், உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் ஆற்றல் கொண்டது. உடல் பருமனை குறைக்க, வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சளை நெல்லிக்காயுடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும், குர்குமின் நிறைந்த மஞ்சள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இருமல் மற்றும் சளியைக் குறைக்கவும் சர்க்க்ரை நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இஞ்சி
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படும் நிலையில், தொப்பை கொழுப்பை நீக்க சிறந்த தேர்வாக இருக்கும். வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதுடன், செரிமானத்தை மேம்படுத்திபசியைக் குறைக்கும். இஞ்சி சாறோடு, எலுமிச்சை தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் வெந்நீர் குடித்து வந்தால், தொப்பை காணாமல் போய் விடும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காணப்படுகின்றன. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடலில் சேர்துள்ள நச்சுக்களை நீக்குவதிலும் பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சை உட்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கலாம். இதனால், தொப்பை வேகமாக கரையும்.
ஆம்லா என்னும் நெல்லிக்காய்
உடலின் மூன்று வித தோஷங்களான வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை சமன் செய்யும் நெல்லிக்காய் உடலில் சேரும் நச்சுக்களை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கின்றது. இதை தினமும் உட்கொள்வதால் உடல் எடை குறைவதோடு, முடி உதிர்தல் மற்றும் அமிலத்தன்மை போன்ற பல பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் லெவல் அதிகமா இருக்கா? தினமும் காலையில் இதை குடிங்க.. ஈசியா குறைக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ