Heart Attack Risk: பொதுவாக, இதய நோய், மாரடைப்பு என்பது முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் நடுத்தர மற்றும் இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக உள்ளது. ஏன்.... சிறு குழந்தைகளை கூட இது விட்டு வைக்கவில்லை. குழந்தைகள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நேரிடுகின்றன.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று, கடந்த டிசம்பரில், உத்திர பிரதேச மாநிலம் அலிகாரில் 14 வயது சிறுவனும், 8 வயது சிறுமியும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதிலுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது வந்திருக்கும் ஒரு ஆய்வறிக்கை, மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளது.
விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கான எச்சரிக்கை
உங்கள் வீடு விமான நிலையத்திற்கு அருகில் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு மற்றவர்களை விட மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம், தொடர்ச்சியான உரத்த ஒலி மற்றும் காற்று மாசுபாடு, கொஞ்சம் கொஞ்சமாக இதயத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும், இந்த ஆபத்து வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களும் இதற்கு இரையாகலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சி ஒன்றில் விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் மக்களின் உடலில், அதீத சத்தம் மற்றும் மாசுபாடு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது. விமானங்கள் புறப்படும் போதும் மற்றும் தரையிறங்கும்போது ஏற்படும் சத்தம் மற்றும் விமான நிலைய போக்குவரத்தால் ஏற்படும் ஒலி மாசு போன்ற நிலையான உரத்த சத்தங்கள் அருகில் வசிப்பவர்களின் இதயங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும் படிக்க | சோடியம் குறைந்தால் நரம்பு மண்டலம் பாதிக்கும்.... தவிர்க்க உதவும் சில உணவுகள்
ஒலி மாசுபாடு ஏற்படுத்தும் பாதிப்பு
விமான நிலையம் அருகில் வசிப்பவர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் சத்தத்தில் இருப்பதால், மனித உடல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, இரத்த அழுத்தம் அதிகரித்து, இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலை நீண்ட காலத்திற்கு மாரடைப்பை ஏற்படுத்தும்.
காற்று மாசுபாடு ஏற்படுத்தும் பாதிப்பு
விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் ஒலி மாசுபாடு மட்டுமின்றி காற்று மாசுபாடுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. விமானத்தின் என்ஜின்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் சுற்றியுள்ள காற்றை விஷமாக்குகிறது. இந்த நச்சு காற்று நுரையீரல் மற்றும் இதயம் இரண்டிற்கும் ஆபத்தானது. இத்தகைய காற்றில் நீண்ட நேரம் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது.
மாரடைப்பு அபாயம் 20% அதிகம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில், ஆயிரக்கணக்கானோரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு, விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்கள் மற்றும் தொலைவில் வசிப்பவர்களிடையே ஆன தரவுகலுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. விமான நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் 20% அதிகமாக இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | நாள் முழுவதும் சுறுசுறுப்பாக சூறாவளி போல் இருக்க... இந்த பானத்தை தினமும் குடிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ