Weight Loss Tips: அதிக கலோரிகளை எரித்து... தொப்பையை கரைக்கும் சில சூப்பர் பயிற்சிகள்

Belly Fat Burning Tips: உடல் பருமன் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நமது அழகையும் கெடுக்கிறது. வயிறு மற்றும் இடுப்பை சுற்றி உள்ள கொழுப்பு உடல் அமைப்பை கெடுத்து, தோற்றத்தை பாதிக்கும்.

தொப்பை கொழுப்பை கரைக்க, அதிக கலோரிகளை எரிக்க உதவும் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது பலன் தரும். கொழுப்பை குறைக்க சிறந்த டயட்டை பின்பற்றுவது நிச்சயம் உதவும் என்றாலும், அதனுடன் சேர்த்து, சிறந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்வது விரைவான பலனை கொடுக்கும்.

1 /8

நமது ஆரோக்கியத்தையும் அழகையும் கெடுக்கும், தொப்பை கொழுப்பை கரைக்க உதவும், சில உடற்பயிற்சிகள் குறித்து அறிந்து கொள்ளலாம். நடைப்பயிற்சி மிகச் சிறந்த பயிற்சி என்றாலும், குறிப்பிட்ட சில உடற்பயிற்சிகள் அதிக கலோரிகளை எரிக்க உதவுகின்றன என்பதை மறுக்க இயலாது.  

2 /8

3 /8

ஜாகிங்: ஓடுதல் அல்லது ஜாகிங் பயிற்சி, அதிக கலோரிகளை எரிக்கும் ஆற்றல் கொண்ட பயிற்சிகளில் ஒன்று. ஒரு மணி நேர ஜாகிங், நபரின் வேகம் மற்றும் உடல் வலிமையை பொறுத்து, 500 முதல் 1000 கலோரி வரை இருக்கிறது. இதில் தசைகளுக்கு அதிக வேலை கிடைப்பதால், அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது.  

4 /8

பிளாங்க் பயிற்சி: தொப்பை கொழுப்பை கரைக்கும் மிகச்சிறந்த பயிற்சிகளில் பிளாங்க் பயிற்சி மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. தரையில் குப்புற படுத்து கொண்டு, கைகளை மடக்கி ஊன்றி கொண்டு, விரல்களை தரையில் பதித்த படி, உடலை மேலே உயர்த்தி செய்யும் பயிற்சி, உடலின் அனைத்து பாகங்களுக்கும் வேலை கொடுக்கும் மிகச் சிறந்த பயிற்சி.

5 /8

ஸ்கிப்பிங் பயிற்சி: உடலின் பல்வேறு தசைகளுக்கும் வேலை கொடுக்கும் மிகச் சிறந்த பயிற்சியான ஸ்கிப்பிங் பயிற்சியில், உடல் வலிமையுடன் இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது. அதிக கலோரிகளை எரிக்க உதவுவதோடு, மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. ஒரு மணி நேர பயிற்சியில், 60 முதல் 1000 கலோரிகளை இருக்கலாம் என்கின்றனர் வல்லுனர்கள்.

6 /8

நீச்சல் பயிற்சி: உடலின் பல்வேறு தசைகளுக்கு வேலை கொடுப்பதால், நீச்சல் பயிற்சியிலும், அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. நீங்கள் தேர்ந்தெடுக்கும் நீச்சல் முறை மூலம், மிகச் சிறந்த வகையில் கலோரிகளை இருக்கலாம். பட்டர்பிளை வகை நீச்சல் பயிற்சி, மிக அதிக கலோரிகளை எரிக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

7 /8

சைக்கிள் ஓட்டுதல்: சைக்கிளிங் மிகச்சிறந்த கார்டியோ பயிற்சிகளில் ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சைக்கிளின் பயிற்சியில், முழங்கால்கள் கைகள், கால்கள் என உடலின் பல தசைகளுக்கு வேலை கிடைப்பதால், அதிக கலோரி எரிக்கப்படுகிறது.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.