கொரோனா நமது வாழ்வை தன் பிடியில் சிக்க வைத்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. லாக்டௌன் கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது. பெரும்பாலான அலுவலகங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அனுமதித்தனர். சிலர் தற்போது அலுவலகம் செல்லத் தொடங்கி விட்டாலும், சிலர் இன்னும் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தொற்றுநோய் நமது வாழ்வை பல வழிகளில் மாற்றி விட்டது. நீண்ட நேரம் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் பலர், உடல் எடை அதிகரித்து அதன் காரணமாக அவதியில் உள்ளனர். 


குறைந்த அளவிலான உடல் செயல்பாடு காரணமாக பலரது செரிமானம் பாதிக்கப்பட்டுள்ளது. 


நள்ளிரவு உணவு போன்ற பழக்கங்களால், செரிமானத்தில் (Digestion) மட்டுமல்லாமல் முதுகுப் பகுதியிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. நீங்கள் உங்கள் அலுவலக வேலையை செய்ய முறையான மேஜைகள் மற்றும் நாற்காலிகளை பயன்படுத்தவில்லை என்றால், தினமும் காலை எழும்போது முதுகுவலியுடன் தான் எழுந்திருக்க வேண்டியிருக்கும். நீங்களும் இப்படிப்பட்ட வலியுடன் போராடிக்கொண்டிருந்தால், சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 


நாள்பட்ட முதுகுவலி (Back Pain) பிரச்சனையைத் தீர்க்க, பல நிபுணர்கள் பல உக்திகளை பரிசோதித்துள்ளார்கள். முதுகுவலி தினசரி செயல்பாட்டை பாதிப்பதால் இதில் அவசர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 


நீங்கள் பசியுடன் இருக்கும்போது, ​​வேலை செய்யத் தேவையான கலோரிகள் அல்லது ஆற்றலை உங்களது உடல் நாடுகிறது. பசி, தசைகள் இழப்பை ஏற்படுத்துகிறது, இது முதுகெலும்புக்கு அதிக அழுத்தத்தை அளிக்கிறது. முதுகெலும்பில் அதிகப்படியான அழுத்தம் முதுகுவலியை மேலும் மோசமாக்குகிறது.


ALSO READ: வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமா; இல்லை அழவும் வேண்டும்


வைட்டமின் டி (Vitamin D) குறைபாடு மிகவும் பொதுவானது. பெரும்பாலும் முதுகுவலிக்கு மிகவும் பொதுவான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. ஆகையால், உங்கள் வைட்டமின் டி அளவை எப்போதும் சோதித்து சரிபார்க்கவும். இது இரத்த பரிசோதனை மூலம் செய்யப்படும்.


முதுகு வலிக்கான சில வீட்டு வைத்தியங்கள்:


உங்கள் தினசரி உணவில் இரண்டு டீஸ்பூன் கருப்பு எள் விதைகளை சேர்க்கவும். வெள்ளை எள் விதைகள் கால்சியம் உறிஞ்சுதலைக் குறைக்கும். கருப்பு எள் விதைகள் உடலில் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துவதோடு எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 


நாள் முழுவதும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள். உங்கள் வேலையின் இயல்பு அமர்ந்தபடி செய்வதாக இருந்தால், முதுகு வலி வராமல் இருக்கம் ஒன்று நீங்கள் தரையில் அமர்ந்து வேலை செய்யலாம் அல்லது உங்கள் முதுகுத்தண்டு நேராக இருப்பது போல நாற்காலியில் அமர்ந்து மேஜையில் வேலை செய்யவும்.


நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தபடி இருக்காமல், அவ்வப்போது வேலை செய்யும் இடத்திலிருந்து எழுந்து காலார நடந்து வந்தால், தசை பிடிப்புகள் இல்லாமல் இருக்கும். உடல் பாகங்களும் இயல்பாக, ஆரோக்கியமாக இருக்கும்.


ALSO READ: Health News: ஏராளமாய் நன்மைகளை அள்ளித் தரும் ஏலக்காயை பயன்படுத்தி பயன் பெறுவோம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR