கெட்ட கொலஸ்ட்ரால் எச்சரிக்கை அறிகுறிகள்: கொலஸ்ட்ராலின் பெயரைக் கேட்டாலே அது கெட்டது என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால், கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டும் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலில் ஆரோக்கியமான செல்களை உருவாக்க இரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால் கெட்ட கொழுப்பின் அளவு அதாவது எல்டிஎல் அதிகரிக்கும் போது, ​​கொழுப்பு நாளங்களில் குவிந்து, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துகிறது. 


பல சமயங்களில் அதிக கொலஸ்ட்ராலுக்கான காரணங்கள் இரத்தம் உறைதல் வரை செல்கிறது. இந்த ஆபத்துகளைத் தவிர்க்க, நீங்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். சில குறிப்பிட்ட அறிகுறிகள் உங்கள் உடலில் தெரியத்தொடங்கினால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள்


1. நகத்தின் நிறம் மாறுதல்


உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, ​​உங்கள் தமனிகளில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. இது நரம்புகளில் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. கை, கால் விரல்களுக்கு சரியான ரத்தம் கிடைக்காததால், நகங்களின் நிறம் வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான இந்த அறிகுறியை புறக்கணிக்காதீர்கள்.


மேலும் படிக்க | Jackfruit: பலாப்பழம் சாப்பிட்ட பிறகு மறந்து கூட இதை சாப்பிடாதீங்க 


2. கால்களின் உணர்வின்மை


உங்கள் கால்கள் மரத்துப் போகத் தொடங்கும் போது, ​​அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம். அதாவது இரத்த ஓட்டம் மற்றும் தமனிகள் வழியாக ஆக்ஸிஜன் விநியோகத்தில் அடைப்பு உள்ளது என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம். இதன் காரணமாக, கால்களில் வலி மற்றும் அவற்றின் உணர்வின்மை, கூச்ச உணர்வு ஆகியவை ஏற்படுகின்றது. 


3. உயர் இரத்த அழுத்தம்


உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உயர் இரத்த அழுத்தத்துடன் நேரடியாக தொடர்புடையது. இரத்தத்தில் கொழுப்பு எவ்வளவு அதிகமாகிறதோ, அந்த அளவுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏனென்றால், கொலஸ்ட்ரால் காரணமாக ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது. ​​இதயத்துக்கு ரத்தத்தை பம்ப் செய்ய தமனிகள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆகையால் உயர் இரத்த அழுத்தம் கெட்ட கொலஸ்ட்ராலுக்கான மிக முக்கியமான அறிகுறியாகும்.


கெட்ட கொழுப்பிலிருந்து தப்பிக்க சில எளிய வழிகள்:


- கொழுப்பு நிறைந்த இறைச்சிகளைத் முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.


- சூடான உணவையே உட்கொள்ள வேண்டும்.


- நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.


- அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்க்க வேண்டும். 


- இனிப்பான பொருட்களை குறைவாக உட்கொள்ளலாம்


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Weight Loss Tips: தினசரி டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சில உணவுகள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR