உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், நீங்கள் பல பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். உண்மையில், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அத்துடன் இது நீரிழிவு மற்றும் பல கடுமையான நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். எனவே அதிக கொலஸ்ட்ரால் ஏற்பட முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா? வாருங்கள் இந்த கட்டுரை மூலம் தெரிந்துக்கொள்வோம்.
அதிக கொழுப்புக்கான முக்கிய காரணங்கள்
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க முக்கியக் காரணம் உங்களின் தவறான உணவு முறை ஆகும். உண்மையில், நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவை எடுத்துக் கொண்டால், உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இதில் பால் பொருட்களும் அடங்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்க்க முயற்சி செய்யுங்கள். முடிந்தால், அதிக புரதம் நிறைந்த பொருட்களை உட்கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன
உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இதில் இருந்து விலகி இருங்கள்
முதலில் வெளியில் செய்யப்படும் உணவுகளை தவிர்க்கவும். இதனுடன் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு பின்னர் சிக்கல்கள் ஏற்படலாம். முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் மன அழுத்தம் கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இது தவிர, நீங்கள் இறைச்சி, பால் பொருட்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
இந்த விஷயங்களை கவனித்துக் கொள்ளுங்கள்
கொழுப்பு நிறைந்த இறைச்சிகளைத் தவிர்க்கவும்: இறைச்சி புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனினும், சில இறைச்சியில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு (சேசுரேடட் ஃபேட்) உள்ளது. அதிக அளவில் இதை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை பாதிக்கிறது.
இனிப்பான பொருட்களை குறைவாக உண்ணுங்கள்: இனிப்பு மற்றும் சர்க்கரை சேர்த்த பொருட்களை சாப்பிடுவதால், உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலும் குறைந்து கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதற்கு பதிலாக இனிப்பு பழங்களை சாப்பிடுங்கள்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்: உணவில் நிறைவுற்ற கொழுப்பைக் குறைத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். இது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். உங்கள் எடை தொடர்ந்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தால், அது இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR