உயிருக்கு உலை வைக்கும் சீனா பூண்டு... கண்டுபிடிக்கும் எளிய முறை இது தான்
கடந்த 2014ம் ஆண்டில் தடை செய்யப்பட்ட சீனப் பூண்டு இந்தியாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ள காய்கறி சந்தைகளிலும்இவை விற்கப்படுவதாக பகீர் செய்தி வெளியாகியுள்ளது.
பூண்டு மருத்துவ அறிவியல் மற்றும் ஆயுர்வேதத்தில்பல நோய்களுக்கான சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் நிலையில், நாம் அனைவரும் அதனை தவறாமல் சேர்த்துக் கொள்கிறோம். இந்நிலையில், பூண்டு விற்பனை குறித்த பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பூண்டு விளைச்சலில் முதன்மை நாடாக உள்ள சீனா
சர்ச்சைக்கு பெயர் பெற்ற நாடான சீனா, முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகளை போலவே டூப்ளிகேட் பொருட்களை தயாரித்து வழங்குவதில் பிரசித்தி பெற்ற நாடாக உள்ளது. இதற்கு விவசாய பொருட்களும் விதிவிலக்கல்ல. இதய ஆரோக்கியம் முதல் எடை இழப்பு வரை எண்ணிலடங்காத நன்மை கொண்ட பூண்டு விளைச்சலில் முதன்மை நாடாக உள்ளது சீனா. ஆனால், விவசாயத்தில் பின்பற்றப்படும் உயர் ரக தொழில்நுட்ப முறை மற்றும் அதிகப்படியான ரசாயன உரப் பயன்பாடு, உணவுகளை விஷமாக ஆக்கியுள்ளது. சீனாவில் விளைவிக்கப்படும் பூண்டு நம் உடலுக்கு ஆபத்தானது (Health Alert) என்பது கண்டறியப்பட்ட நிலையில், நாட்டு மக்களின் நலன் கருதி சீன நாட்டின் பூண்டுக்கு கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது.
அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் கொண்ட பூண்டு
எனினும், சீன பூண்டின் விலை மிகவும் குறைவு என்பதால், அதிக லாபம் கிடைக்க, இந்தியாவில் கள்ளச்சந்தையில் சீனா பூண்டு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக கடத்தப்பட்ட பூண்டில் அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், சீன பூண்டில் ஆறு மாதங்களுக்கு பூஞ்சை ஏற்படுவதை தடுக்க மெத்தில் புரோமைடு கொண்ட பூஞ்சைக் கொல்லியைக் கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது என்று கூறியிருந்தார். இது தவிர, தீங்கு விளைவிக்கும் குளோரின் மூலம் வெளுக்க வைக்கப்படுகிறது. இதன் காரணமாக, பூண்டு நீண்ட காலங்களுக்கு வெள்ளையாகவும் மற்றும் பிரெஷ்ஷாக இருப்பது போல் தோன்றும்.
மீதில் புரோமைடு பூஞ்சைக் கொல்லி என்றால் என்ன?
மீதைல் புரோமைடு என்பது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த, மணமற்ற, நிறமற்ற வாயு ஆகும், இது விவசாயம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறையில் பூஞ்சை, களைகள், பூச்சிகள், நூற்புழுக்கள் (அல்லது வட்டப்புழுக்கள்) உட்பட பல்வேறு வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இதனை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. , மீத்தில் புரோமைடு அதிக அளவில் எடுத்துக் கொண்டால் மத்திய நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் சுவாச செயலிழப்பு மற்றும் நுரையீரல், கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு சேதம் ஏற்படலாம். அதுமட்டுமின்றி கோமா நிலைக்கு செல்லும் அபாயமும் உள்ளது.
மேலும் படிக்க | சுகர் லெவல் சொன்னபடி கேட்க இரவில் இதை குடிங்க போதும்
பூண்டு வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
சீன பூண்டு அளவில் பெரியது. அதன், தோல்களில் நீலம் மற்றும் ஊதா நிற கோடுகள் காணப்படும். அத்தகைய பூண்டை சந்தையில் வாங்குவதைத் தவிர்க்கவும். பூண்டில் வைட்டமின்கள் சி மற்றும் பி6, மாங்கனீசு மற்றும் செலினியம் ஆகியவை உள்ளன. சிறந்த ஆக்ஸிஜனேற்றியான பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் நச்சு இரசாயனங்கள் அடங்கிய சீன பூண்டு ஆரோக்கியத்தை காலி செய்து விடும்.
மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை இயற்கையான வழியில் கட்டுக்குள் கொண்டு வர இந்த எளிய பானங்கள் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ