Bay Leaf: இந்த 5 நோய்களுக்கு அருமருந்தாகும் பிரியாணி இலை
பிரியாணி இலை அல்லது பிரிஞ்சி இலை என்பது இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள்.
பிரியாணி இலை அல்லது பிரிஞ்சி இலை என்பது இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள். இது உணவின் சுவையை அதிகரிக்கிறது. தமாலபத்திரி, லவங்கப்பத்திரி, பிரியாணி இலை, பட்டை இலை, மலபார் இலை போன்றவை இதன் வேறு பெயர்கள்.
உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் இந்த பிரிஞ்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கு தெரிவிதில்லை. பல நோய்களைக் குணப்படுத்த இந்த பிரிஞ்சி இலைகளைப் பயன்படுத்தலாம். குறிப்பாக பிரிஞ்சி இலைகள் 5 நோய்களுக்கு ஒரு சஞ்சீவியாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்
மருத்துவ குணம் நிறைந்த பிரிஞ்சி இலைகளில் பொட்டாஷியம், தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடலுக்கு நன்மை பயக்கும். இந்த மசாலா எந்தெந்த நோய்களில் இருந்து நிவாரணம் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பிரிஞ்சி இலைகளின் 5 அற்புதமான நன்மைகள்
1. மன ஆரோக்கியத்திற்கு சிறந்தது
பிரிஞ்சி இலை மன ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது மிகச் சிலருக்குத் தெரியும். பல காரணங்களால் உங்களுக்கு டென்ஷன் ஏற்பட்டிருந்தால், இரவில் தூங்கும் முன் 2 இலைகளை எடுத்து அதை எரித்து உங்கள் அறையில் வைக்கவும். இதன் புகையை மணப்பது மன அழுத்தத்தை குறைக்கும்.
மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள்
2. மூச்சுத் திணறலை குறைக்கும்
உங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், கண்டிப்பாக பிரிஞ்சி இலைகளை சாப்பிடுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் பிரியாணி இலைகளை போட்டு கொதிக்க வைக்கவும். பின் இந்த நீரால் ஒரு துணியை நனைத்து மார்பில் வைத்து, இவ்வாறு செய்வதால் சுவாசப் பிரச்சனை நீங்கும்.
3. சோர்வு நீங்கும்
நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தால், பிரியாணி இலைகளைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் இதன் வாசனை காரணமாக, இதைக் கொண்டு எடுக்கும் அரோமாதெரபி மூலம், உடல் தளர்வடைகிறது. இதன் காரணமாக மனதுக்கும் நிம்மதி கிடைக்கிறது.
4. நீரிழிவு நோய்க்கு சிறந்தது
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பிரியாணி இலைகள் மிகவும் சிறந்தது. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பொடி செய்து ஒரு மாதம் காலம் சாப்பிட இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
5. தொற்றுநோயைத் தடுக்கும்
பிரியாணி இலைகள் பல தொற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. சளி, ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க கஷாயமாக குடிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறூப்பேற்காது.)
மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR