Beauty Tips: அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்று சொல்லும் அழகு பொருட்கள்
Multipurpose use of beauty products: முடி பராமரிப்பு மற்றும் தோல் பராமரிப்பு என தோற்றப் பொலிவுக்கு உதவும் அழகு பொருட்கள் இவை...
புதுடெல்லி: அழகுசாதனப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதற்கான பட்ஜெட்டும் நமது வருமானத்தில் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. தோல் மற்றும் முடி இரண்டிற்கும் பயன்படுத்தக்கூடிய பொதுவான அழகுசாதனப் பொருட்கள் செலவை கொஞ்சம் குறைக்கின்றன.
சரும பராமரிப்பு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முடிகளுக்கான அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஒப்பனை தயாரிப்புகளில் உள்ள அதே மூலப்பொருள், பராமரிப்பு பொருட்களிலும் உள்ளது.
அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை நீங்கள் செலவில்லாமல் வீட்டிலேயே பயன்படுத்தலாம். எப்படி இருந்தாலும் இந்தத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மைக்கேலர் நீர்
உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக நீங்கள் ஏற்கனவே மைக்கேலர் தண்ணீரைக் கொண்டிருக்கலாம். கனமான அல்லது லேசான ஒப்பனையை அகற்ற இது மிகவும் மென்மையான தயாரிப்பு ஆகும். இது தோலில் பெரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.
மேலும் படிக்க | இரவு தூங்கும் முன் இந்த 4 உணவுகளை சாப்பிட்டால் தொப்பை கரையும்
சருமத்திற்கான மைக்கேலர் தண்ணீரைத் தவிர, இது மைக்கேலர் வாட்டர் ஷாம்பு எனப்படும் ஷாம்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை முடி பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். இது ஒரு பயனுள்ள அழகுசாதனப் பொருளாகும், இது அழுக்கையும் எண்ணெயையும் அகற்ற பயன்படுத்தப்படுகிறது.
கொலாஜன்
இது ஒரு அத்தியாவசிய புரதமாகும், இது சருமம் மற்றும் முடி இரண்டிற்கும் நன்மை பயக்கும். கொலாஜன் சருமத்தின் வயதாகும் தன்மையை குறைக்கிறது.
கொலாஜன் முடியிலும் இதேபோன்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கொலாஜன் ஹேர் மாஸ்க் சிகிச்சையானது முடி அமைப்பை மேம்படுத்தி, மென்மையாகவும் பிரகாசமானதாகவும் மாற்றும். புரதத்தால் செறிவூட்டும் கொலாஜனை தொடர்ந்து பயன்படுத்தினால், 12 முதல் 16 வாரங்களுக்குள் அற்புதமான மாற்றம் தெரியும்.
ஹையலூரோனிக் அமிலம்
ஒவ்வொரு ஆண்டும் நமது சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. உலர்ந்த உடையக்கூடிய முடி மற்றும் மந்தமான சருமத்திற்கு இந்த மாசுபாடுகள் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஹைலூரோனிக் அமிலம் முடி உச்சந்தலையில் நன்மை பயக்கும் மற்றும் இந்த வளிமண்டல இரசாயனங்களிலிருந்து தோலைக் காப்பாற்றுகிறது.
இது தோல் மற்றும் உச்சந்தலையில் ஈரப்பதத்தை பூட்டுவதாக அறியப்படுகிறது. இது உங்கள் தலைமுடியை வெப்பத்திலிருந்தும், ஹேர் ஸ்டைலிங்கினால் ஏற்படும் சேதங்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
மேலும் படிக்க | விளக்கெண்ணெய் என்னும் ஆமணக்கு எண்ணெயின் அற்புத சக்தி
மொராக்கோ எண்ணெய் அல்லது சீரம்
மொராக்கோ எண்ணெய் அதன் முடி மற்றும் தோல் பராமரிப்பு நன்மைகளுக்கு பிரபலமானது. இந்த எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் சீரம் உங்கள் முடி மற்றும் தோல் இரண்டிற்கும் பயன்படுத்தப்படலாம். இது லேசானது ஆனால் மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது.
கற்றாழை
கற்றாழை தோல் மற்றும் முடி இரண்டிற்கும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், மிகவும் பிஸியாக இருந்தால், வீட்டில் வளரும் கற்றாழை சாற்றை தினசரி பயன்படுத்த முடியாது.
ஆனால் அலோ வேரா ஜெல், மிகவும் எளிமையான தயாரிப்பாக வருகிறது, இது கூந்தல் மற்றும் தோல் இரண்டிற்கும் ஜெல் மற்றும் மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதனை தலையில் தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்து, காலையில் தலையை அலசினால், அழகான கூந்தல் அமைவது உறுதி.
மேலும் படிக்க | தொப்பையை குறைக்க இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ