Sharp Nose Tips: கூர்மையான மூக்கு வேண்டுமா? அறுவைச் சிகிச்சை இல்லாமல் பெறலாம்
Nose Beauty Tips: முகத்தில் பளபளப்பைக் கொண்டுவர மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் மூக்கின் அழகைப் புறக்கணிக்கிறார்கள். மூக்கின் அழகை எளிதாக மேம்படுத்த சில எளிய டிப்ஸ் இதோ.
கூர்மையான மூக்கிற்கான டிப்ஸ்: மூக்கு நமது உடலின் மிக முக்கியமான ஒரு பாகமாகும். சுவாசிப்பது, நுகர்வது என பல முக்கிய பணிகளை நமது மூக்கு செய்கிறது. இது தவிர முகத்தின் அழகை சீர்படுத்துவதிலும் மூக்கிற்கு முக்கிய பங்கு உள்ளது.
சிலருக்கு மூக்கு தடிமனாக இருக்கும். அது அவர்களுக்கு பிடிக்காமலும் இருக்கலாம். மூக்கை மெல்லியதாக மாற்ற பலர் பல வகை அறுவை சிகிச்சைகளின் உதவியை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், தடித்த மூக்கை எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் மெலிதாக மாற்ற விரும்புபவர்கள், மூன்று பயிற்சிகள் மூலம் அதை செய்யலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தடிமனான மூக்கை மெலிதாக மாற்ற 3 வழிமுறைகள்
தடிமனான மூக்கை மெல்லியதாகவும், கூர்மையான வடிவத்திற்கு கொண்டு வரவும் இந்த மூக்கு பயிற்சிகளை செய்யலாம். இவை மூக்கின் தசைகளை சீராக்கி அதிலிருந்து கூடுதல் கொழுப்பை குறைக்கிறது.
1. மூக்கு வடிவமைத்தல் ( நோஸ் ஷேப்பிங்)
- மூக்கை வடிவமைக்கும் பயிற்சியை செய்ய, முதலில் யோகா மேட்டில் அமர்ந்துகொள்ளுங்கள்.
- உங்கள் இடுப்பை நேராக வைத்து, நீண்ட மற்றும் ஆழமான மூச்சை எடுத்து வெளியே விடவும்.
- பின்னர் மூச்சை உள்ளிழுத்து இரு ஆள்காட்டி விரல்களாலும் மூக்கின் இருபுறமும் அழுத்தவும்.
- இதற்குப் பிறகு, லேசான அழுத்தத்துடன், மூச்சை வெளியே விடவும்.
- இப்படி சுமார் 10 முறை செய்யவும். ஆனால் தேவைக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | காலை உணவில் இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள், வயிற்று கொழுப்பை ஐஸ் போல் கரையும்
2. மூக்கு சுருக்கம் (நோஸ் ஷார்டனிங்)
- மூக்கை சுருக்கும் பயிற்சியை செய்ய, ஒரு இடத்தில் வசதியாக அமர்ந்துகொள்ளவும்.
- இப்போது இடுப்பை நேராக வைத்து ஆழமாகவும் மெதுவாகவும் சுவாசிக்கவும்.
- இப்போது ஆள்காட்டி விரலால் மூக்கின் நுனியில் லேசாக அழுத்தவும்.
- இதற்குப் பிறகு, விரலின் உதவியுடன் மூக்கின் நுனியை கீழே கொண்டு வந்து, பின், மேல்நோக்கி நகர்த்தவும்.
- இந்த பயிற்சியை சிறிது நேரம் தொடர்ந்து செய்யவும்.
3. மூக்கை நேராக்குதல் (நோஸ் ஸ்டிரெய்டனிங்)
- மூக்கை நேராக்க, முதலில் வசதியான நிலையில் அமர்ந்துகொள்ளவும்.
- பின்னர், வாயை சிரிக்கும் நிலையில் வைத்து, இரண்டு ஆள்காட்டி விரல்களின் உதவியுடன், மூக்கை மேல்நோக்கி உயர்த்தவும்.
- இதை 20 முதல் 30 முறை தினமும் செய்யவும்.
சில நாட்களில் வித்தியாசம் தெரியும்
மூக்கிற்கான இந்த பயிற்சிகளை தினமும் செய்தால், உங்கள் மூக்கு நல்ல வடிவம் பெற ஆரம்பித்து, சில நாட்களில் வித்தியாசத்தைக் காணத் தொடங்குவீர்கள். இருப்பினும், உடலில் உள்ள பாகங்கள் எப்படி இருந்தாலும், அவற்றின் அமைப்பால், தாழ்வுமனப்பான்மை கொள்வதும், நம்பிக்கையை இழப்பதும் நல்லதல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. ஆகையால், உங்களை வேறொருவரைப் போல் காட்ட உங்கள் மனதில் கூடுதல் அழுத்தம் கொடுக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆவாரம் பூவும் அடுக்கடுக்கான பயன்களும்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR