Skin Care Tips: இன்றைய பிஸியான வாழ்க்கையில், பெரும்பாலானவர்களால் சருமத்தை பராமரிக்க முடியதில்லை. நமது சூழலில் தூசி, மாசு துகள்கள் மற்றும் மணல் துளிகள் இருப்பதன் காரணமாகவும், மாறிவரும் வானிலை காரணமாகவும், தோலில் நிலை மோசமடைகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகப் பொலிவு குறைந்துவிட்டால், சில எளிய வழிகளின் மூலம், அதை சரி செய்ய முடியும். உங்கள் முகப்பொலிவை மீட்டெடுக்க உதவும் ஐந்து விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


முகத்தின் பொலிவை அதிகரிக்கும் ஐந்து அற்புத விஷயங்கள்:


1. தக்காளி
தக்காளி (Tomato) தழும்புகளை நீக்கி, நிறத்தை அழகாக மாற்றும். இதில் அதிக அளவில் வைட்டமின்கள் உள்ளன. அவை தழும்புகளை அகற்ற உதவுவது மட்டுமல்லாமல், சருமத்தில் உள்ள கொலாஜன் அளவை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைக்கும். தக்காளி மூலம் முகப்பொலிவைப் பெற ஒரு தேக்கரண்டி தக்காளி சாறு எடுத்து, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர் அதை உங்கள் முகம் முழுவதும் தடவவும். 15 நிமிடம் விட்டு பின் முகத்தை கழுவவும்.


2. எலுமிச்சை
எலுமிச்சை (Lemon) ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். தோல் நிபுணர்களின் கூற்றுப்படி, எலுமிச்சை உங்கள் நிறத்தை ஒளிரச் செய்வதற்கும் ஆழமாக சுத்தப்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும். இது கறைகளை நீக்கி உங்கள் சருமத்தை களங்கமற்றதாக மாற்றும். எலுமிச்சம் பழச்சாற்றை கள்ள மாவு அல்லது வெள்ளரிக்காய் சாறு கலந்து தடவி வந்தால், சில நாட்களில் நல்ல வித்தியாசம் தெரியு


ALSO READ:அடிக்கடி கீரை சாப்பிட்டால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும் 


3. மஞ்சள்
பல நூற்றாண்டுகளாக மஞ்சள் (Turmeric) இயற்கையாகவே அழகை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். மஞ்சளை பச்சைப் பாலில் கலந்து முகத்தில் தடவி வர, சில நாட்களில் முகம் பளபளக்கும்.


4. கடலை மாவு 
கடலை மாவு ஒரு இயற்கையான மற்றும் பயனுள்ள ஃபேஸ் பேக்காக பயன்படுத்தப்படுகிறது. சருமத்தின் வகைக்கு ஏற்ப, அதில் பால் அல்லது தயிர் கலந்து, சிறிது மஞ்சள் கலந்து பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பினால், இதில் எலுமிச்சை அல்லது தக்காளி சாறு சேர்க்கலாம். இதனை முகத்தில் தடவினால் தழும்புகள் மறைந்து பொலிவு திரும்பும்.


5 அரிசி மாவு
அரிசி மாவில் பாரா அமினோ பென்சாயிக் அமிலம் உள்ளது. இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதோடு வைட்டமின் சி உற்பத்தியையும் அதிகரிக்கிறது. இந்த பேக் செய்ய, இரண்டு தேக்கரண்டி அரிசி மாவுடன் மூன்று தேக்கரண்டி பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி, முகத்தை மெதுவாக மசாஜ் செய்யவும். இதனை முகம் முழுவதும் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் முகத்தை கழுவ வேண்டும்.


ALSO READ:உங்கள் அழகை கெடுக்கும் மருக்களை அகற்ற மிக எளிய வீட்டு வைத்தியம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR