Low BP: ரத்த அழுத்தம் குறைவாக இருக்க? இந்த காய்களை சாப்பிடவேக்கூடாது!
Blood Pressure Caution: ரத்த அழுத்தம் அதிகமாவதைப் பற்றி அதிகம் பேசும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைவதைப் பற்றி யாரும் பேசுவதில்லை... ரத்த அழுத்தம் குறைந்தால் என்ன செய்வது?
Hypotension: உயர் ரத்த அழுத்தம் (Hypertension) குறித்து நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் குறைந்த ரத்த அழுத்தம் (Hypotension) குறித்து படித்தவர்களிடம் கூட விழிப்புணர்வு இல்லை. உலகில் இளம் வயதினருக்கு 100ல் 10 பேருக்கு குறை ரத்த அழுத்தம் உள்ளது. வயது கூடக்கூட இந்த சதவிகிதமும் கூடுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ரத்த அழுத்தம்
குறை ரத்த அழுத்த நோய், இருப்பதே தெரியாமல் திடீரென பிரச்சனையை பெரிய்து செய்துவிடும். சில வேளைகளில் திடீரென்று உயிருக்கு ஆபத்து தருகின்ற நோயாகவும் மாறிவிடுவது உண்டு. ரத்தக்குழாய்களில் ஓடும் ரத்தமானது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இந்த வேகத்திற்குப் பெயர்தான் ‘ரத்த அழுத்தம்’ (Blood pressure) ஆகும். பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. என்ற அளவில் இருந்தால் அதை இயல்பான அளவு என்று சொல்வோம்.
மரபியல், வயது, இனம், வாழ்க்கை முறை மற்றும் பிற மருத்துவக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இரத்த அழுத்தம் குறையலாம். ஆனால், ரத்த அழுத்ததிற்கு காரணம் நாம் உண்ணும் உணவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சமச்சீர் உணவு இரத்த அழுத்தத்தைக் சீர் செய்ய உதவுவதோடு, இரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பையும் குறைக்கிறது.
பீட்ரூட் மற்றும் பூண்டு
குறைவான ரத்த அழுத்தம் இருப்பவர்கள், பீட்ரூட், பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சூப்பர்ஃபுட்ஸ் என்று சொல்லப்படும் இந்த இரு உணவுகளும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யாமல், மிதமாக்கும் தன்மையை கொண்டவை. எனவே, ஏற்கனவே ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கோட்பாட்டளவில் இந்த இரு உணவுகளும் நமது ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இவற்றை உட்கொள்வதால் நமது ரத்த நாளங்கள் விரிவடைகின்றன, இதன் காரணமாக ரத்தம் எளிதாகப் பாய்கிறது. பீட்ரூட் மற்றும் பூண்டை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த இரண்டு பொருட்களால் மட்டுமே ரத்த அழுத்தம் குறையும் என்று சொல்லமுடியாது.
பீட்ரூட்டில் முக்கியமாக காணப்படும் நைட்ரேட், ஓமம், முட்டைக்கோஸ், வெங்காய தாமரை, கார முட்டைகோசு கீரை, பசலைக்கீரை, ப்ரோக்கோலி போன்ற எல்லா பச்சை காய்கறிகளும் ரத்த அழுத்தத்தை குறைப்பவை. அதிலும், பூண்டில் உள்ள எல்லிசின் நமது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஆனால் அவற்றின் நன்மைகளை கருத்தில் கொண்டு பார்த்தால், அவற்றை முற்றிலுமாக தவிர்க்க முடியாவிட்டாலும், குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்கள், பூண்டு மற்றும் பீட்ரூட்டை குறைத்து உண்ண வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | தினமும் ‘இதை’ செய்தால் இரத்த அழுத்தம் சீராகும்..செய்து பாருங்களேன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ