நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடலாமா: இதனால் நன்மையா, தீமையா
Beetroot Benefits for Diabetes: பீட்ரூட் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது சத்தான கூறுகள் நிறைந்தது. சுவையில் இதில் இனிப்பு இருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
சர்க்கரை நோய்க்கு பீட்ரூட் பலன்கள்: சர்க்கரை வியாதி என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் உருளைக்கிழங்கு சாப்பிடாமல் இருப்பது, இனிப்புகள் சாப்பிடாமல் இருப்பது, சாதம் சாப்பிடாமல் இருப்பது என மக்கள் பல கட்டுப்பாடுகளை கையாள்கின்றனர். பலவற்றை உணவிலிருந்து விலக்கி வைக்கின்றனர்.
நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடலாம்?
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பீட்ரூட்டை சாப்பிடலாமா? கூடாதா? பீட்ரூட் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது சத்தான கூறுகள் நிறைந்தது. சுவையில் இதில் இனிப்பு இருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
ஏனெனில் பீட்ரூட் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தையும் இது சீராக்குகிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், இது, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. பீட்ரூட் சாப்பிடுவது உடலுக்கு சக்தியைத் தருகிறது. இதன் காரணமாக உடலில் பலவீனம் ஏற்படாது.
எனினும், பீட்ரூட்டை அதிக அளவில் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சர்க்கரை நோயாளிக்கு பீட்ரூட் எப்படி பலன் தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் மா இலைகள்; பயன்படுத்துவது எப்படி
சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
செரிமான மண்டலத்தை வலுவாக்கும்
தற்காலத்தில் பெரும்பாலானோருக்கு அதிக அளவு உணவு உண்ட பிறகு செரிமானம் ஆவதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனையால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் பீட்ரூட் சாப்பிடுவது நன்மை பயக்கும். உணவு உண்ணும் முன் இதை உட்கொள்வதன் மூலம், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், சர்க்கரையின் குறைபாடும் நீங்கும். இது உணவை ஜீரணிக்கும் ஆற்றலை தந்து, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
நீரிழிவு நோயால் உருவாகும் நோய்கள் குணமாக
நீரிழிவு நோயால், பலருக்கு உயர் ரத்த அழுத்தம், பலவீனம், சிறுநீரக கோளாறு போன்ற நோய்கள் வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில் பீட்ரூட் சாப்பிடுவது நன்மை பயக்கும். இதனை உட்கொள்வதால் சர்க்கரை நோயினால் ஏற்படும் மற்ற நோய்களில் இருந்து விடுபடலாம்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல உணவுகளை தவிர்க்க வெண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில் பீட்ரூட் சாப்பிடுவது நன்மை பயக்கும். ஏனெனில் அதில் தீங்கு விளைவிக்காத இயற்கை சர்க்கரை உள்ளது. உணவு உட்கொள்வதற்கு முன் இதை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். ஏனெனில் இது இரத்தத்தில் எளிதில் கரையும். உடல் ஆற்றலும் இதனால் அதிகரிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தப்பி தவறி கூட முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR