Benefit of Arugampul Juice: நாம் வசிக்கும் இடத்திலேயே மிகப் பெரிய பொக்கிஷங்கள் இருக்கும். அதை அறியாமல் நாம் உலகம் முழுவதும் தேடிக் கொண்டிருப்போம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது ஹான் அறுகம்புல். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அறுகம்புல்லின் மகத்துவம் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. அறுகம்புல் (Scutch Grass) மருத்துவ மூலிகைகளில் ஒன்று. அது நம்மைச் சுற்றியே இருப்பதால் அதன் மகத்துவம் நமக்குத் தெரியவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறுகம்புல் (Scutch Grass) என்பது "Cynodon Dactylon" புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அறுகம்புல்லுக்கு மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்ற வேறு பெயர்கள் உண்டு.


* வாதம், பித்தம், சளி போன்றாவற்றால் உண்டாகும் நோய்களுக்கு மருந்தாக அறுகம்புல் பயன்படுகிறது. உடலில் வியர்வை நாற்றம் போக்கவும், உடல் அரிப்பைப் போக்கவும், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நீங்கவும் மருந்தாக உதவுகிறது இந்த மருத்துவ மூலிகை.


மேலும் படிக்க: இந்த மூன்று ஜூஸை தினமும் குடித்தால் தைராய்டு குணமாகும்


* அருகம்புல்லில் இருந்து சாறு எடுத்து ஜூஸாக குடித்தால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் விடை பெற்று ஓடிவிடும். அறுகம்புல்லை அலசி சுத்தம் செய்த பிறகு, அத்துடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும். பிறகு அதனுடன் தண்ணீரை சேர்த்து நன்றாக கலக்கி, வடிகட்டினால் அருகம்புல் ஜூஸ் ரெடி.


* உடல் வெப்பத்தை அகற்றும் இந்த ஜூஸ், சிறுநீரை அதிகரிக்கும், குடல் புண்களை ஆற்றும், ரத்தத்தை தூய்மையாக்கும். உடலை பலப்படுத்தும்.


* அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும். எனவே இது உடல் பருமன் குறையவும் உதவுகிறது.


* சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது. இவர்கள் தினந்தோறும் அருகம்புல் சாற்றை குடித்தால் அதீத பசி கட்டுப்படும்.


* ஆற்றல்கள் பல கொண்ட இந்த அருகம்புல், முந்தி விநாயகருக்கு பிடித்தமானது. மனிதனின் உடல் கோளாறுகளை தீர்க்கும் அறுகம்புல் விக்ன விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது.


மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க இந்த ஸ்பெஷல் காபியை குடியுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR