காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
காலை நேரத்தில் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பதற்கு பதிலாக 1 கிளாஸ் தண்ணீரை குடிக்கலாம், இது பலவிதமான அற்புதங்களை உடலில் செய்கிறது.
நெடுங்காலமாகவே பலரும் தனது நாளை ஒரு கப் சூடான காபியிலோ அல்லது தேநீரிலோ தான் தொடங்குகின்றனர், பலரும் இதனை வழக்கமாகவே வைத்திருக்கின்றனர். காலையில் தூங்கி எழுந்தவுடன் இதில் ஏதேனும் ஒன்றை குடிக்கும்போது ஒருவித புத்துணர்ச்சி ஏற்படுகிறது, அதனாலேயே பெரும்பாலான மக்கள் இதனை குடிக்கின்றனர். ஆனால் தேநீர் அல்லது காபியை அதிகளவில் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் பலரும் கூறுகின்றனர். மேலும் தேநீர் அருந்துவது உங்களுக்கு ஒரு சௌகரியமான பானமாக இருக்கலாம். ஆனால் அதனை வெறும் வயிற்றில் அருந்துவது அவ்வளவு நல்லதல்ல, இது உங்கள் வயிற்றுக்கு ஒரு அசௌகரியமான உணர்வை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க
காலை வேளையில் வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதன் மூலம் உங்க வயிற்றிலுள்ள பாக்டீரியாக்கள் உடலுக்குள் பரவ தொடங்கும், இதனால் உங்களது வளர்சிதை மாற்றம் பாதிப்பிற்குள்ளாகும், அதோடு வயிற்றெரிச்சல், செரிமான கோளாறு போன்றவையும் ஏற்படும். மேலும் இதிலுள்ள காஃபின் உங்களது உடலி டீஹைட்ரேட் ஆக்கிவிடும், காலை நேரத்தில் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பதற்கு பதிலாக 1 கிளாஸ் தண்ணீரை குடிக்கலாம், இது பலவிதமான அற்புதங்களை உடலில் செய்கிறது. நீங்க காலையில் டீ அல்லது காபியை குடிக்கும்போது அதிலுள்ள பிஹெச்-ன் அளவு உங்களது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்க செய்யும், அதுவே தண்ணீரை குடிக்கும்போது வயிற்றில் சமநிலை தன்மை ஏற்படும்.
அதிக சூடாகவோ அல்லது குளிர்ந்த நீரையோ குடிக்காமல் அறை வெப்பநிலையில் சாதாரணமாக உள்ள தண்ணீரையே நீங்கள் தைரியமாக குடிக்கலாம். அவ்வாறு தினமும் நீங்கள் தண்ணீரை குடிக்கும்பொழுது அல்சர், வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது அதுமட்டுமின்றி வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமடைகிறது.
மேலும் படிக்க | வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ