பெருஞ்சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: நம் சமையலறையில் நாம் பயன்படுத்தும் பல மசாலா பொருட்கள் நாம் செய்யும் சமையலை ருசிகரமாக்குவதோடு இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளன. இவை பல வழிகளில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது சமையலில் அதிகம் பயன்படும் மசாலா பொருளான பெருஞ்சீரக விதைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். பெருஞ்சீரகம் ஒரு மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டாலும், அது வீட்டு வைத்தியத்திலும் பயன்படுத்தப்படுகிறது. வயிற்றின் வெப்பத்தைத் தணிப்பதோடு, பல உடல்நலப் பிரச்சினைகளையும் பெருஞ்சீரக நீர் சரி செய்கிறது. 


பல நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள பெருஞ்சிரக விதை நீரை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இது குறித்து ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நிபுணரான வருண் கத்யால் கூறியுள்ள விஷயங்கள் பின்வருமாறு: 


பெருஞ்சீரக நீரின் நன்மைகள்


- உடல் எடை குறைப்பு


வெறும் வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீரை ஒருவர் உட்கொண்டால், அதன் மூலம் எடை குறைகக்கப்படுவது மட்டுமல்லாமல், உடல் பருமனும் கட்டுப்படுத்தப்படும். ஆகையால் வெறும் வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீரை குடிப்பது மிக அவசியமாகும். 


மேலும் படிக்க | Emergence of Tea: சுவைக்கும் தேநீரின் ஆரோக்கிய நன்மைகள் 


-  கண்களுக்கு பலம் சேர்க்கும்
கண்களின் பலவீனத்தைப் போக்க பெருஞ்சீரக நீர் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் ஏ உடன், பெருஞ்சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றன. இது கண்களின் பலவீனத்தை நீக்குவது மட்டுமல்லாமல், கண்களின் வீக்கம் மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும். தினமும் பெருஞ்சீரக தண்ணீரை குடிப்பதால், கண்கள் பலமடையும். 


- சரும பிரச்சனைக்கு நல்ல மருந்து


பெருஞ்சீரக நீர் சரும பிரச்சனையை சரி செய்வதில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரும பிரச்சனைகள் இருப்பவர்கள் தொடர்ந்து இந்த நீரை பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 


கருஞ்சீரகத்தில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தை பளபளப்பாக்குவது மட்டுமல்லாமல், முகத்தில் உள்ள கறை போன்றவற்றிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். தொடர்ந்து பெருஞ்சீரக தண்ணீர் குடித்து வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும். 


(பொறுப்புத் துறப்பு: பெருஞ்சீரகம் உடல் ஆரோக்கியத்துக்கு பல வழிகளில் உதவும். ஆனால் எதையும் அதிகப்படியாக எடுத்துக்கொள்வது தீங்கை விளைவிக்கலாம். இந்த பரிந்துரைகளை ஏற்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | Neeri-KFT சிறுநீரக நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகுமா; மருத்துவர் கூறுவது என்ன..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR