கொலஸ்ட்ராலுக்கு மூலிகை நீர்: கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் உள்ள மெழுகு போன்ற ஒரு பொருளாகும், இது கல்லீரலில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால் என இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால், பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சனைகளில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் அடங்கும். நீங்கள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த விரும்பினால், நீங்கள் பல வகையான ஆயுர்வேத மூலிகைகளை உட்கொள்ளலாம். ஆயுர்வேத மூலிகைகள் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் என்கிறார் காசியாபாத் ஸ்வர்ண ஜெயந்தியின் ஆயுர்வேதாச்சார்யா டாக்டர் ராகுல் சதுர்வேதி. இந்த மூலிகைகள் உங்கள் உடலுக்கு பெரிதும் பயனளிக்கும். முக்கியமாக மூலிகை தண்ணீர் தயாரித்து குடித்தால், அதிக பலன் கிடைக்கும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதய நோய் முதல் பக்கவாதம் வரை, இரத்தத்தில் அதிக கொழுப்பு அளவு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை வரவழைக்கலாம். கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று எளிதான வாழ்க்கை முறை மாற்றங்கள் (நீரிழிவை நிர்வகித்தல், எடையைக் கட்டுக்குள் வைத்திருத்தல் போன்றவை). ஆனால், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், அடைப்பட்ட நரம்புகளைத் திறக்க உதவும் சில ஆயுர்வேத மூலிகைகள் உள்ளன. 


பதிமுகம் நீர்


பதிமுகம்  என்பது கேரளாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. பதிமுகம் அல்லது சாயமரத்தின் பட்டையை குடிநீரில் சேர்த்து அருந்துவது ப​திமுகம் குடிநீர் என்று அழைக்கப்படுகிறது. பதிமுகம் தண்ணீர் குடித்தால் கொலஸ்ட்ரால் கட்டுப்படும். இது டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது, இது சிறுநீர் மூலம் கொழுப்பைக் குறைக்கும். இதைத் தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீரை எடுக்கவும். அதனுடன் 1/4 தேக்கரண்டி பதிமுகம் மற்றும் 1 அங்குல இஞ்சி சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, அதை ஆறவைத்து ஒரு மண் பானையில் வைக்கவும். இப்போது இந்த தண்ணீரை தவறாமல் குடிக்கவும். இது கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும்.


மேலும் படிக்க |  இதய நோய்களை அண்டாமல் இருக்க செய்யும் ‘சூப்பர்’ உணவுகள்!


மஞ்சள் நீர்


உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த மஞ்சள் தண்ணீரையும் குடிக்கலாம். மஞ்சளில், குர்குமின் உட்பட பல அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. இது கொலஸ்ட்ராலை திறம்பட கட்டுப்படுத்தும். மஞ்சள் தண்ணீரைத் தயாரிக்க, 1 லிட்டர் தண்ணீரை எடுத்து, அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும். ஆர்கானிக் மஞ்சளை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. அதன் பிறகு, தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாகக் குறைந்தவுடன் வடிகட்டி ஆறவிடவும். அதன் பிறகு, தினமும் சாப்பிடுங்கள். இதன் மூலம் கொலஸ்ட்ராலை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.


மருத மரத்தின் பட்டை நீர்


கொலஸ்ட்ராலை குறைக்க மருத மரத்தின் பட்டை நீரை அருந்தவும். மருத மரத்தின் பட்டை நீர் உடலின் வீக்கம் மற்றும் கொலஸ்டிராலை சுத்தம் செய்யும். மருத மரத்தின் பட்டை தண்ணீரை தயாரிக்க, முதலில் சுமார் 2 டீஸ்பூன் மருத மரத்தின் பட்டை பட்டை எடுத்துக் கொள்ளவும். இதற்குப் பிறகு, அதை 1 கிளாஸ் தண்ணீரில் போட்டு சுமார் 8 முதல் 9 மணி நேரம் அப்ப்டியே விடவும். அதன் பிறகு.  இந்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இதனால் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.


பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள்,  சில பரிந்துரைகள் மற்றும் குறிப்புகள் மட்டுமே. அறிகுறிகள் நீண்ட காலமாக நீடித்தால் அவற்றை புறக்கணிக்காதீர்கள். உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | நீரிழிவை ஒழித்துக் கட்டும் நார் சத்து நிறைந்த ‘சில’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ