பாடாய் படுத்தும் பல்வலியை குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
Home Remedies For Toothache: சில சமயங்களில் பல்வலி தாங்க முடியாததாகி விடுகிறது. இதன் காரணமாக தூக்கம் கெட்டு, தலைவலி ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன.
Home Remedies For Toothache: பல் வலி இந்த காலத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இன்றைய நவீன உலகில் உணவு பழக்கங்கள் மிக மோசமாக இருப்பதால், உடலில் பல பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. பல்வலியும் இதில் ஒன்று.
சில சமயங்களில் பல்வலி தாங்க முடியாததாகி விடுகிறது. இதன் காரணமாக தூக்கம் கெட்டு, தலைவலி ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன. பல் வலி அன்றாட வழக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக குளிர்காலத்தில், பல் வலியின் தாக்கம் அதிக தீவிர நிலையை அடைகின்றது.
ஆகையால், பல்வலி துவங்கிய உடனேயே அதற்கான சிகிச்சை செய்வது நல்லதாகும். லேசான வலியைக் கூட நாம் அலட்சியம் செய்யக்கூடாது. ஏனெனில் அது பிற்காலத்தில் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும். பல்வலியைப் போக்க நாம் பயன்படுத்தக்கூடிய சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி இங்கே காணலாம்.
1. உப்பு மற்றும் கிராம்பு
முதலில், சில கிராம்பு மொட்டுகளை நன்கு அரைத்து, பின்னர் உப்பு சேர்த்து கலக்கவும். இப்போது இந்த கலவையை இரவில் தூங்கும் முன் வலியுள்ள பற்களுக்கு இடையே வைத்து அழுத்தவும். காலையில் எழுந்ததும் வலி நீங்கியிருக்கும்.
2. மஞ்சள் மற்றும் உப்பு
ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு கலந்து அதை பேஸ்டாக கலக்கவும். அதன் பின் இந்த பேஸ்ட்டை பற்களில் தேய்க்கவும். படிப்படியாக தாங்க முடியாத வலி நீங்கும்.
மேலும் படிக்க | மூளை ஆற்றல் முதல் கண்பார்வை கூர்மை வரை.... மக்காச்சோளத்தை அடிக்கடி சேர்த்துக்கோங்க
3. வேம்பு இலைகள்
வேப்ப இலைகளை அரைத்து, சாறு எடுத்து, அதைக் கொண்டு வாய் கொப்பளிக்கவும். இது பல்வலியைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் வலியை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.
4. வெங்காயத் துண்டுகள்
வெங்காயம் பொதுவாக அனைத்து வித உணவு வகைகளிலும் பயன்படுகிறது. பல் வலிக்கும் இது ஒரு மருந்தாக உதவுகிறது. வெங்காயத்தை வெட்டி அதை உங்கள் பற்களுக்கு இடையில் அழுத்தினால் வலி குறையும்.
5. எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு பற்களை சேதப்படுத்தும் பாக்டீரியாக்களின் எதிரியாக கருதப்படுகின்றது . ஒரு குவளையில் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து வாய் கொப்பளித்தால் பல்வலி குணமாகும்.
(இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Lungs Detox: நுரையீரல் நச்சுக்களை நீக்கி... வஜ்ரம் போல் வலுப்படுத்தும் சில பானங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ