)
Weight Loss Tips: உடல் பருமன் இந்த காலத்தில் ஒரு தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது. இது மக்களை உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மனதளவிலும் பாதிக்கிறது. உடல் பருமன் காரணமாக அதிகப்படியான கொழுப்பு மனித உடலில் சேரத் தொடங்குகிறது. இந்த நோய் ஒருவரது நம்பிக்கையை குறைப்பது மட்டுமல்லாமல் பிற உடல் நல கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றது.
உடல் பருமன் காரணமாக, இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற தீவிர நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். தொப்பையில் கொழுப்பு (Belly Fat) சேர்ந்து விட்டால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கபடுகின்றது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அவற்றில் சில வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் பருமன் உள்ள நோயாளிகள் உடல் எடையை குறைக்க பின்பற்றக்கூடிய எளிய வழிகள்
சர்க்கரையை தவிர்ப்பது நல்லது:
பதப்படுத்தப்பட்ட மற்றும் வெள்ளை சர்க்கரையை உட்கொள்வதையோ அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதையோ தவிர்க்கவும். இத்தகைய உணவுகள் உடலில் கூடுதல் கொழுப்பைச் சேர்க்கும். சர்க்கரைக்குப் பதிலாக பழங்கள், தேன் அல்லது இயற்கையான இனிப்புகளைப் பயன்படுத்தலாம்.
மைதா சாப்பிடுவதைத் தவிர்க்கவும்:
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் அதிகரித்து வரும் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால், மைதாவால் செய்யப்பட்ட பொருட்களை உட்கொள்வதைக் குறைக்கலாம் அல்லது முற்றிலுமாக நிறுத்தலாம். மைதா கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதால் உடலில் கொழுப்பு சேரும்.
அரிசி மற்றும் சப்பாத்தியை குறைக்கவும்:
உடல் எடையைக் குறைக்க அன்றாட உணவில் அரிசி மற்றும் சப்பாத்தியை குறைக்க வேண்டும். இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவது கடினம். கூடுதலாக, இவற்றின் கிளைசெமிக் குறியீடும் அதிகமாக உள்ளது, இது எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது.
புரதத்தச்சது நிறைந்த உணவுகள்:
உங்கள் உணவில் முடிந்தவரை கலோரிகளை குறைத்து புரதத்தின் உட்கொள்ளலை அதிகரிக்கவும். ஏனெனில் கலோரி நிறைந்த உணவுகளை உண்பதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கிறது. அதே நேரத்தில், உடலில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கிறது. புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
நீரேற்றத்துடன் இருப்பது அவசியம்:
உடல் எடையை குறைக்க தண்ணீர் மிகவும் அவசியம். சுகாதார வல்லுநர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க அறிவுறுத்துகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ