யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் உணவுகள்
Uric Acid Control Tips: உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், மூட்டு வலி மற்றும் கீல்வாத பிரச்சனைகளும் அதிகரிக்கும். இது தவிர, சிறுநீரக கற்களுக்கான வாய்ப்புகளும் அதிகமாகும்.
Uric Acid Control Tips: யூரிக் அமில பிரச்சனை இந்நாட்களில் பலரிடம் காணப்படும் பொதுவான ஒரு பிரச்சனையாக உள்ளது. பியுரின் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் யூரிக் அமில பிரச்சனை அதிகமாகின்றது. உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் அதனால் பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், மூட்டு வலி மற்றும் கீல்வாத பிரச்சனைகளும் அதிகரிக்கும். இது தவிர, சிறுநீரக கற்களுக்கான வாய்ப்புகளும் அதிகமாகும். யூர்க் அமில பிரச்சனை உள்ளவர்கள் பல இயற்கையான வழிகளில் அதை குறைக்கலாம். குறிப்பாக, குளிர்காலத்தில் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெள்ளரிக்காய் (Cucumber)
வெள்ளரிக்காய் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்தது. இதை உட்கொள்வதால் உடலில் நீர்ச்சத்து அதிகமாகி, உடலில் இருக்கும் நச்சுகளை நீக்குவதில் உதவி கிடைக்கும். இது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை நீக்குகிறது. இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்களுக்கு வெள்ளரிக்காய் மிகவும் நன்மை பயக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ப்ரோக்கோலி (Broccoli)
கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ப்ரோக்கோலி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது கீல்வாத தாக்குதல்களைக் குறைக்க உதவுகிறது. இதை உணவில் சேர்ப்பதன் மூலம் மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைப்பதோடு கீல்வாத பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | குளிர்காலத்தில் ஒருவர் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
கீரை (Spinach)
கீரையில் மிகக் குறைந்த அளவு பியூரின் உள்ளது. இது யூரிக் அமில நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பாலக் கீரையில் இரும்புச் சத்தும் உள்ளது. இது இரத்த சோகையைக் குணப்படுத்துவது மட்டுமல்லாமல், பல நோய்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
வைட்டமின் சி நிறைந்த உணவுகள் (Vitamin C Foods)
வைட்டமின் சி நிறைந்த உணவுகள் யூரிக் அமிலத்தை உடைத்து, உடலில் இருந்து வெளியேற்ற அனுமதிக்கின்றன. இதற்கு கிவி, எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு, தக்காளி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவை யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைப்பதோடு கீல்வாத பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகின்றன.
பீன்ஸ் (Beans)
பீன்ஸ் புரதத்தின் சிறந்த மூலமாக உள்ளது. இது யூரிக் அமில அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. இது கீல்வாத தாக்குதல் அபாயத்தையும் குறைக்கிறது. இது தவிர, ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இதில் அதிக அளவில் காணப்படுகின்றன.
முட்டைகள் (Eggs)
குளிர்காலத்தில் முட்டைகளை அதிகமாக உட்கொள்வதும் யூரிக் அமில அளவை குறைக்க உதவும். இதில் புரதச்த்து, வைட்டமிண்கள், கனிமங்கள் அதிகம் இருக்கின்றன. குறிப்பாக முட்டை வீக்கத்தை குறைத்து, மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுகிறதா? இந்த பிரச்சனையாக இருக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ