டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்
Dengue: டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு, உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவதாகும். இதன் காரணமாக நோயாளியின் உடல் நிலை மோசமாகிறது.
Dengue: மழைக்காலம் பலருக்கு பிடித்தமான காலமாக இருந்தாலும், இது பல வித நோய்கள் பரவும் காலமாகவும் உள்ளது. வழக்கமாக இந்த காலத்தில் டெங்கு மிகவும் அச்சத்தை உண்டாக்கும் ஒரு தொற்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் நாட்டின் பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழைக்காலத்தில் ஆங்காங்கே தேங்கும் மழை நீர், கழிவுநீர் ஆகியவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
டெங்கு காய்ச்சல் ஒரு தீவிர நோயாக கருதப்படுகின்றது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்த கொசு மற்றவர்களையும் கடிக்கும் போது டெங்கு அந்த நபர்களுக்கும் பரவுகிறது. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு, உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவதாகும். இதன் காரணமாக நோயாளியின் உடல் நிலை மோசமாகிறது.
டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், சில வீட்டு வைத்தியங்கள் மற்றும் உணவுமுறை மாற்றங்கள் பிளேட்லெட் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்க உதவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதும் அவசியமாகும். டெங்கு காய்ச்சலால் குறையும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பப்பாளி இலைச்சாறு
பப்பாளி இலைச்சாறு (Papaya Leaf Juice) டெங்கு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிளேட்லெட்களை அதிகரிக்கும் தன்மை அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்களின் உடலில் பிளேட்லெட் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க பப்பாளி இலைச்சாறு உதவுகிறது. இதை செய்ய, பப்பாளி இலைகளை சுத்தம் செய்து, அரைத்து சாறு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம். இப்படி செய்து வந்தால் இரத்த பிளேட்லெட் (Blood Platelet) எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கின்றது.
கிவி பழம்
கிவி (Kiwi) பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பழமாகும். இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகிறது. டெங்கு நோயாளிகள் ஒரு நாளைக்கு 2-3 முறை கிவி சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேப்பிலை சாறு
வேப்பிலைகளில் (Neem Leaves) வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. வேப்பிலை டெங்கு வைரஸை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது மட்டுமின்றி, வேப்பிலை சாறு பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதை செய்ய வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் சாறு எடுத்து ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கலாம். இது டெங்கு அறிகுறிகளைக் குறைக்கவும், பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும்.
மாதுளை சாறு
மாதுளையில் (Pomegranate) இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஆகியவை அதிகமாக உள்ளன. இது உடலில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. தினமும் மாதுளம் பழச்சாறு குடிப்பதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து நோயாளிக்கு பலவீனம் ஏற்படாது. டெங்கு நோயாளிகள் தினமும் மாதுளை சாறு குடித்து வந்தால், இரத்த பிளேட்லெடுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
கிலோய் சாறு
ஆயுர்வேதத்தில் கிலோய் (Giloy) ஒரு முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் பல வித நற்பண்புகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்கவும் கிலோய் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை செய்ய, கிலோயின் தண்டை வேகவைத்து அதன் சாறு எடுத்து தினமும் உட்கொள்ளலாம். இது டெங்குவின் அறிகுறிகளைக் குறைப்பதோடு, உடலையும் பலப்படுத்துகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல்... இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து!! உஷாரா இருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ