உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க செரிமானம் சிறப்பாக இருக்க வேண்டும். செரிமான பிரச்சனை தானே என ஒதுக்கக் கூடாது. இது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு பிரச்சனை தரக் கூடியது. அதில் ஒன்று தான் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் பிரச்சனை. வயிற்றில் அதிகப்படியான அமிலம் உற்பத்தியாவதால் அமிலத்தன்மை என்னும் ஆசிடிட்டி பிரச்சனை ஏற்படுகிறது.
செரிமானம் பாதிக்கப்பட்டால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல், வயிற்று வலி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் பெற, சில பானங்களை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அசிடிட்டியில் இருந்து நிவாரணம் அளிக்கும் இயற்கை பானங்கள் எது என்பது குறித்து உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் பரிந்துரைக்கும் ஆரோக்கிய பானங்களை (Health Tips) தெரிந்து கொள்வோம்.
அமிலத்தன்மை என்னும் அசிடிட்டி பிரச்சனை நீக்க பருக வேண்டிய சில பானங்கள்
சீரக நீர்
சீரகத்தில் செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் நிறைந்துள்ளது. சீரக நீர் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. இது வயிற்றின் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன், வயிற்றில் ஏற்படும் வாயு பிரச்சனையையும் குறைக்கிறது. இதற்கு ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிக்கவும். இதனை வெறும் வயிற்றி குடித்து வருவதால், அசிடிட்டியில் இருந்து முழுமையாக விடுபடலாம்.
இளநீர்
அசிடிட்டியில் இருந்து நிவாரணம் பெற இளநீர் சிறந்த இயற்கை பானங்களில் ஒன்றாகும். இதில் உள்ள இயற்கை என்சைம்கள் செரிமானத்தை மேம்படுத்தி வயிற்றில் உள்ள அமிலத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.இளநீர் வயிற்று அமிலத்தை நடுநிலையாக்கி நிவாரணம் அளிக்கிறது.
பெருஞ்சீரகம் என்னும் சோம்பு நீர்
பெருஞ்சீரகம் என்னும் சோம்பு செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது. பெருஞ்சீரகத்தில் உள்ள கூறுகள் வயிற்றில், நெஞ்சில் உணடாகும் எரிச்சல் உணர்வ்வை கட்டுப்படுத்துவதோடு, வாயு பிரச்சனையையும் நீக்குகிறது. பெருஞ்சீரகம் நீர் செரிமானத்தை மேம்படுத்துவதுடன் அமிலத்தன்மையின் அறிகுறிகளைக் குறைக்கிறது. இதற்கு பெருஞ்சீரகத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவது பலன் அளிக்கும்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இந்த தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க!!
அலோ வேரா சாறு
கற்றாழை சாறு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கையான மருந்தாக செயல்படுகிறது. செரிமான அமைப்பை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்ட கற்றாழை குடல் சுவர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. கற்றாழை சாறு உட்கொள்வதால் அமிலத்தன்மையால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கம் குறைந்து செரிமானம் மேம்படும்.
குளிர்ச்சியான பால்
மோர் ஆசிடிட்டியில் இருந்து நிவாரனம் அளிப்பதைப் போலவே, காய்ச்சி குளிர வைக்கபட்ட பால், அசிடிட்டியில் இருந்து உடனடி நிவாரணம் பெற உதவும். பாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது வயிற்றில் அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. குளிர்ந்த பாலை உட்கொள்வதால் வயிற்றில் நெஞ்சில் உண்டாகும் எரிச்சல் உணர்வு தணிந்து அசிடிட்டியால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
இஞ்சி தேநீர்
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமானத்தை மேம்படுத்தி, அமிலத்தன்மையின் அறிகுறிகளைக் குறைக்கின்றன. இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்த உட்கொள்வதால் வயிற்றில் அமிலத்தன்மை குறைந்து, செரிமானம் சீராக செயல்பட உதவுகிறது. இதைத் தயாரிக்க, இஞ்சியை நன்றாக துருவி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பிறகு உட்கொள்ளவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் உணவுகள்: கண்டிப்பா தினமும் சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ