எகிறும் BP-ஐ எளிதில் குறைக்க உங்கள் வாழ்க்கையில் இந்த மாற்றங்களை செய்தால் போதும்
High BP Remedies: பொதுவாக உயர் இரத்த அழுத்தத்திற்கு எந்த அறிகுறிகளும் தென்படாது என்பதால், இது பெரும்பாலும் அமைதியான கொலையாளி என்றும் அழைக்கப்படுகிறது.
High BP Remedies: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பல வித நோய்களின் பிடியில் நாம் சிக்கிக்கொள்கிறோம். இவற்றில் சில மிக தீவிர நோய்களாகவும் இருக்கின்றன. இப்படிப்பட்ட நோய்களில் உயர் இரத்த அழுத்தமும் ஒன்றாகும். இதனால் இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயம் அதிகரிக்கப்படுகின்றது. இதன் காரண்மாக இது ஓரு தீவிர நோயாக பார்க்கப்படுகின்றது.
அறிகுறிகள் இல்லாமல் படுத்தி எடுக்கும் உயர் இரத்த அழுத்தம்
பொதுவாக உயர் இரத்த அழுத்தத்திற்கு எந்த அறிகுறிகளும் தென்படாது என்பதால், இது பெரும்பாலும் அமைதியான கொலையாளி என்றும் அழைக்கப்படுகிறது. ஆகையால் அவ்வப்போது உயர் இரத்த அழுத்த பரிசோதனை செய்துகொண்டு, இந்த பிரச்சனை இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வெண்டும். உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக அவசியம்.
உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் அதை சரி செய்ய பல வித வீட்டு வைத்தியங்கள் உள்ளன. பல இயற்லையான வழிகளில் இதை நாம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். நமது வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இதை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சில பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான 5 பழக்கங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம்
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் உணவில் அதிக கட்டுப்பாடுகள் தேவை. ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பு, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.
மேலும் படிக்க | சுகர் லெவல், கொலஸ்ட்ரால்.... இரண்டையும் கடுப்படுத்தும் மேஜிக் மசாலா இதுதான்
தவறாமல் உடற்பயிற்சி செய்வது அவசியம்
உடல் செயல்பாடு மிக முக்கியமானதாகும். வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான-தீவிர ஏரோபிக் உடற்பயிற்சிகள் அல்லது 75 நிமிட தீவிர-தீவிர ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்படிகின்றது. வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது தசைகளை வலுப்படுத்தும் உடல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான எடையை பராமரிப்பது அவசியம்
உடல் எடை அதிகமாக இருந்தாலோ, உடல் பருமனால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலோ அதை குறைப்பது மிக அவசியம். சில கிலோகிராம்களை குறைப்பதே உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்
புகைபிடித்தல் (Smoking) அனைத்து வகை நோய்களுக்கும் வாயிற்கதவாக இருக்கின்றது. குறிப்பாக புகைப்பிடிப்பது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும்.
மது அருந்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், அதை உடனே நிறுத்த வேண்டும். மதுபானம் (Alcohol) இரத்த அழுத்தத்தை அதிகரித்து கல்லீரல் சேதமடைய காரணமாகின்றது.
இப்படிப்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்களுடன், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் உட்கொள்வது நல்லது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, அவ்வப்போது மருத்துவரை அணுகி, இதற்கான பரிசோதனையை மேற்கொண்டு, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வாழ்வை முடக்கிப்போடும் முதுகுத்தண்டு பிரச்சனை: அறிகுறிகள் இவைதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ