ஆண்களே! கில்லியாக இருக்க சாப்பிடுங்க கள்ளிப் பழம்
அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் சப்பாத்திக் கள்ளி இந்தியாவின் கிவி பழம் என அழைகப்படுகிறது. இந்த பழத்தை சாப்பிட்டால் ஆண்கள் கில்லியாக இருக்கலாம்.
சப்பாத்தி கள்ளிச் செடி, கடுமையான வறட்சி நிலவும் பகுதிகளில் இருக்கும். தமிழகத்தில் பல்வேறு காடுகளிலும் காணப்படும். மானாவரி காடுகளிலும் கள்ளிச்செடியை பார்க்கலாம், வேலி ஒரங்களில், வெளியில் காலங்களில் சப்பாத்தி கள்ளிச் செடி இருக்கும். இந்த செடி வெறுமனே பார்த்துவிட்டு செல்பவர்கள் ஏராளம். ஆனால், இந்த செடியில் இருக்கும் பழத்திற்கு அத்தனை நன்மைகள் இருக்கிறது. சப்பாத்தி கள்ளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட இதயத் துடிப்பு சீரடையும். இதயத்தில் அடைப்பு இருந்தாலும் சரிசெய்து விடும். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் மாரடைப்பை தவிர்க்க முடியும்.
மேலும் படிக்க | விந்தணு தரத்தை பாதிக்கும் கொரோனா...? - ஆண்களிடம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி
இன்றைய மாறிவிட்ட சூழலில் நூற்றில் அறுபது பெண்களுக்கு மேல் இந்த பிசிஓடி என்னும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை இருக்கிறது. இதனால் கருமுட்டை பலமில்லாமல் போவது, குழந்தை உண்டாவதில் சிரமம், மாதவிடாய் பிரச்சினைகள், கருக்கலைவு ஆகிய பிரச்சினைகள் அதிகமாக உண்டாகின்றன. இந்த சப்பாத்திக் கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கரு முட்டை வளர்ச்சி சீராகும். குழந்தையே இல்லை என்று நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்களுக்கு இந்த பழம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
ஆண்மைக் குறைபாடு, விந்து உயிரணுக்கள் ஆரோக்கியமாக இல்லாதது என ஆண்களுக்கு இருக்கும் பல பிரச்சினைகளை இந்த பழம் தீர்க்கிறது. கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை பெண்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்தில் பிறக்குமாம். குங்குமப்பூவை விட இந்த சப்பாத்திக்கள்ளி பழம் சிறந்தது. வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் தானாக அழிந்து விடுமாம். இந்த பழங்களை குழந்தைப் பேறுக்காக பெண்களும், விந்து உயிரணு உற்பத்திக்காக ஆண்களும் சாப்பிட்டு வரும்போது மற்ற எந்தவித இனிப்பான பொருள்களும் சாப்பிடக் கூடாது. டீ, காபி கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். நடைப்பயிற்சி கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ