Hernia vs Men: வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஹெர்னியா! அதிகம் பாதிக்கப்படுவது ஆண்? இல்லை பெண்

Hernia And Health: வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஹெர்னியா, எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 6, 2023, 12:22 PM IST
  • அறிகுறி இல்லாமலேயே போட்டு தாக்கும் ஹெர்னியா
  • ஹெர்னியா ஏற்படாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும்
  • ஆண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஹெர்னியா
Hernia  vs Men: வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஹெர்னியா! அதிகம் பாதிக்கப்படுவது ஆண்? இல்லை பெண் title=

ஹெர்னியா பாதிப்பு பலருக்கு இருக்கிறது. வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அந்த சூழ்நிலையில், சிறுகுடல் கீழே இறங்கி விடும். இதைத்தான், ஹெர்னியா' அதாவது, குடலிறக்கம் என்று கூறுகிறோம்.

ஹெர்னியா
வயிற்றுப்பகுதி தசைகள் பலவீனமாகும்போது, அதற்கு உள்ளே உள்ள உறுப்புகள் தனது இடத்தை விட்டு வெளியேறும்போது, ஏற்படும் நிலைக்கு ஹெர்னியா என்று பெயர். சற்று நெகிழ்வாக இருக்கும் நமது வயிற்றுப் பகுதி, அதிலும் தொப்புளைச் சுற்றியிருக்கும் தசைகள் மிகவும் மென்மையானவையாக இருக்கும். அதனால் ஹெர்னியா பாதிப்பு ஏற்படுகிறது.

ஹெர்னியாவின் அறிகுறிகள் 
எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே ஹெர்னியா ஏற்படலாம் என்பதால், இதற்கு காரண காரியங்களை பொதுவாகவே சொல்ல முடியும். பெரும்பாலும் வயிற்றுப் பகுதியில் சிறைய அளவுக்கு பிதுக்கம் அல்லது புடைப்பு தெரிவதுதான் ஹெர்னியாவின் அறிகுறி என்று சொல்லலாம். நடக்கும்போது, ஓடும்போது, மாடிப்படி ஏறும்போது வலி ஏற்படும். 

மூச்சுவிடும்போதும், மலம் கழிக்கும்போதும் பிதுக்கம் பெரியதாக மாறும். சிலருக்கு மலம் கழிப்பதில் சிக்கல்களும் ஏற்படலாம். ஹெர்னியாவின் அறிகுறிகள் என்றால் இவற்றைத் தான் பொதுவாக சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க | நுங்கு சாப்பிட்டா 'அது பெரிதாகுமா' தெரியாது... ஆனா இவ்வளவு நல்லது இருக்கா?

ஹெர்னியாவால் ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது உண்மையா?
ஹெர்னியா என்ற நோய்க்கும் ஆண்மைக் குறைவுக்கும் நேரடியான தொடர்பு கிடையாது. ஆனால் அதற்காக எடுத்துக் கொள்ளும் சிகிச்சைக்கும் விந்தணு உற்பத்திக்கும் தொடர்பு இருக்கிறது.

ஆண்களுக்கே அதிகமாக ஏற்படும் இந்த கவட்டை கால்வாய் குடலிறக்கம், அடிவயிறும் தொடையும் சேரும் இடத்தில் ஏற்படும். 

இந்த இடத்தில்தான் வயிற்றையும் விதைப்பையையும் இணைக்கும் ஒரு மூடிய கால்வாய் போன்ற ஒரு அமைப்பு இருக்கிறது. இதன் வழியாகத்தான் விந்துக்குழாய், ரத்தக் குழாய், நரம்புகள் போன்றவை விரைப்பைக்குள் செல்கின்றன. 

இந்தப் பகுதியில் உள்ள தசைகள் பலவீனமாகும்போது குடலும் அதைச் சார்ந்த கொழுப்பு உள்ளிட்டவையும் விரைப்பைக்குள் இறங்கும் என்பதால், ஹெர்னியாவுக்கும் ஆண்மைக் குறைவுக்கும் சம்பந்தப்படுத்தி பேசுகின்றனர். 

அதைத் தவிர, ஹெர்னியாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும்போது தசையை வலுப்படுத்துவதற்காக வலைபோன்ற பொருள் ஒன்று வைக்கப்படும். அதனால், விரைப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கப்படலாம். அப்படிப்பட்ட நிலையில் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படலாம்.  

 

மேலும் படிக்க | என்ன செய்தாலும் சர்க்கரை குறையலையா... ‘இந்த’ விதையின் பொடி ஒன்றே போதும்!

ஹெர்னியாவின் வகைகள் என்னென்ன?
வயிற்றில் ஏந்தப் பகுதியிலும் ஹெர்னியா ஏற்படலாம். குடலிறக்கம் ஏற்படும் இடத்தைப் பொறுத்து அவை வகைப்படுத்தப்படுகின்றன.

கவட்டை கால்வாய்
கவட்டை கால்வாய் (Inguinal) பகுதியில் குடல் இறக்கம் ஏற்படுவது பொதுவாக ஏற்படும் குடலிறக்கங்களில் பிரதானமானது ஆகும்.  ஆண்களுக்கே அதிகமாக ஏற்படும் இந்த குடலிறக்கம், அடிவயிறும் தொடையும் சேரும் இடத்தில் ஏற்படும். 

ஃபெமோரல் ஹெர்னியா
பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ஹெர்னியாவின் பெயர் ஃபெமோரல் ஹெர்னியா. இது மேல் தொடைப்பகுதி அல்லது கவட்டை என்று சொல்லப்படும் பகுதியில் ஏற்படுகிறது. வயிற்றில் இருந்து காலுக்கு ரத்தக்குழாய், நரம்புகள் போன்றவற்றை எடுத்துச் செல்லும் கால்வாய்ப் பகுதியில் தசைகள் பலவீனமாகும் கவட்டை கால்வாய் ஏற்படுகிறது. 

முன்வயிற்றில் தொப்புள் பகுதியிலும் 'குடல் பிதுக்கம்' ஏற்படலாம். இதை தொப்புள் ஹெர்னியா என்கிறார்கள். உடல் பருமனாக இருப்பது, கருவுறுவது போன்ற காரணங்களால் பெண்களுக்கு இந்த வகை ஹெர்னியா ஏற்படுகிறது.

ஹையாடஸ் ஹெர்னியா
ஹையாடஸ் ஹெர்னியா என்ற வகையை குடலிறக்கம் என்று சொல்ல முடியாது. அது வயிற்றையும் நெஞ்சையும் பிரிக்கும் தசைப்பகுதி பலவீனமடைவதால், வயிற்றுப் பகுதியானது மேல்நோக்கிப் பிதுங்கி வரும். இதனால் உணவும், அமிலங்களும் மேல் எழும்பி நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். 

ஹெர்னியா ஆபத்து யாருக்கு அதிகம்?
அதிக உடல் எடை கொண்டவர்கள், எடையை அதிக அளவில் தூக்குபவர்கள், அதிகமாக இருமல், சளி, மூச்சுக் குழாய் பிரச்னைகள் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு ஹெர்னியா வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | அளவு மிஞ்சினால் ஆபத்தாகும் உப்பு! தவிர்க்க 7 வழிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News