மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ‘கார்டிசோல்’ ஹார்மோன் அளவை குறைக்கும் செடிகள்!

மன அழுத்தத்தை போக்கும் சில தாவரங்கள்: செடிகளுடன் நேரத்தை செலவிடுவது உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியமான பலன்களை கொடுப்பதை உணர்வுப்பூர்வமாக உணர்வதாக பலரும் சொல்கிறார்கள். இருப்பினும், அவற்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள பலர் தவறிவிடுகிறார்கள்.
வீட்டில் தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்க பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். சமையல் தேவைகளை பூர்த்தி செய்யும் செடிகள் கண்ணிற்கு குளிர்ச்சியையும், மனதிற்கு உற்சாகமும் தருவதால் பசுமையான செடிகளை வளர்க்க விரும்புகிறார்கள். குழந்தைகளை போன்றே செடிகளையும் அன்பாக பராமரித்து, வளர்த்தெடுக்கவும் செய்கிறார்கள். செடிகளுடன் நேரத்தை செலவிடுவது உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியமான பலன்களை கொடுப்பதை உணர்வுப்பூர்வமாக உணர்வதாக பலரும் சொல்கிறார்கள். இருப்பினும், அவற்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள பலர் தவறிவிடுகிறார்கள்.
நமது இன்றைய வாழ்க்கை முறையில் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத நபர்களை பார்ப்பது என்பது மிகவும் அரிது. மன அழுத்தும் இதய நோய், மாராடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல அபாயங்களையும் அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் தாவரங்கள் மனிதர்களின் மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் மனநிலைக் கோளாறுகளின் அறிகுறிகளைக் குறைக்கும். இதன் மூலம் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தி, மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
மன அழுத்தத்தை போக்கும் சில தாவரங்கள்!
1. துளசி செடி
வீடுகளில் காணக்கூடிய பொதுவான தாவரங்களில் ஒன்றாகும். இது ஆன்மிக்க ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. துளசி செடியில் உள்ள மன அழுத்தத்திற்கு எதிரான குணங்கள் உள்ளது. செடியில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் போக்க உதவுகிறது. . துளசி செடி ஒரு அடாப்டோஜனாக செயல்படுகிறது (உடல் மன அழுத்தத்தை குறைக்க உதவும் இயற்கையான பொருள்) எனவே உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் துளசி செடியை வைத்திருப்பது மன தெளிவை மேம்படுத்தும். அதோடு துளசி இலைகள் எடுத்துக் கொள்வது வயிற்றுப் புண்கள், இருமல், சளி மற்றும் தொண்டை புண் போன்ற பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கும்
2. மல்லிகைச் செடி
மல்லிகைச்செடி கண்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் அழகான பூக்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், பணியிடம் மற்றும் வீட்டில் உண்டாகும் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும் இயற்கையான வழியாகும். மல்லிகை செடி கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், புதிய சூழலையும் நல்ல வாசனையையும் தருவதன் மூலம் உங்கள் வேலைத் திறனை அதிகரிக்க உதவுகிறது. இந்த அழகான செடி உங்கள் அறையை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் நறுமணம் மற்றும் புதிய ஆக்ஸிஜன் விநியோகம் சுற்றுப்புறத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
3. அலோ வேரா செடி
கற்றாழை செடியின் எல்லையற்ற ஆரோக்கிய நன்மைகள் காரணமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. வீடுகளில் , அலுவகத்தில் வைக்க எப்போதும் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த செடி ஒரு சதைப்பற்றுள்ள தாவரமாகும், இது மின்னணு சாதனங்களிலிருந்து தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சைக் குறைக்க உதவுகிறது. எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் கற்றாழை சுற்றுச்சூழலில் அதிக ஆக்ஸிஜனைக் கொடுக்க உதவுகிறது. கற்றாழை ஒரு குறைந்த பராமரிப்பு தேவைப்படும் செடி ஆகும், இது இயற்கையான காற்று சுத்திகரிப்பு ஆகும்.இது உங்களுக்கு சுவாசிக்க புதிய காற்றைக் கொடுப்பதன் மூலம் கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
4. ஸ்னேக் பிளாண்ட்
ஸ்நேக் பிளாண்ட் என்று அழைக்கப்படும் பாம்பு கற்றாழை அலுவலக இடங்களில் வைக்க சிறந்தது. மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த தாவரங்களில் ஒன்று பாம்பு கற்றாழை. உங்கள் படுக்கையறையிலோ அல்லது அலுவலக மேசையிலோ இந்த செடியை வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றி, சுவாசிக்க புதிய காற்றை வழங்குவதன் மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்தும். இந்த தாவரத்தை ஒரு அழகான சிறிய தொட்டியில் வைக்கலாம். இது தலைவலி, கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சனைகளை எளிதாக்க உதவுகிறது.
5. லாவெண்டர் செடி
உங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வைத்திருக்க வேண்டிய மிகவும் இனிமையான தாவரங்களில் ஒன்று லாவெண்டர் செடி. அற்புதமான வாசனைக்கு பெயர் பெற்ற இந்த செடி, மனித இனம் அனைவருக்கும் கடவுள் கொடுத்த வரம். இதன் இனிமையான வாசனை மனதைத் தணிக்கவும், பதட்டம், மன அழுத்தத்தைப் போக்கவும் உதவுகிறது, மேலும் அதன் மயக்கும் நறுமணம், தூக்கத்தைத் தூண்ட உதவும் மயக்கப் பண்புகளைக் கொண்டுள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | Mental Health: கண்ணீர் விடும் மனது... 6 அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ