Weight Loss Tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த கேள்விக்கு பலரது பதில் 'ஆம்' என்றுதான் இருக்கும். உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளன. எனினும் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பது மிக முக்கியம். இல்லையென்றால் நாம் பிற சிக்கல்களில் சிக்கிக்கொள்ளக்கூடும். உடல் எடையை குறைக்க உடல் செயல்பாடுகளுடன் ஆரோக்கியமான உணவும் மிக முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க பலர் பல முயற்சிகளை எடுத்தாலும், சிலருக்கே இதில் வெற்றி கிடைக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலர் உடல் எடையை குறைக்க ஜிம் செல்கிறார்கள், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அந்த எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


கோடை காலம் உடல் எடையை குறைக்க ஏற்ற காலமாக கருதப்படுகிறது. சூரிய ஒளி, வெப்பம் மற்றும் ஆரோக்கியமான உணவு மூலம், இந்த காலத்தில் எளிதாக எடையை குறைக்க முடியும். கோடை காலத்தில் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியாக கருதப்படுகின்றது. உடல் எடையை குறைக்க கோடைக்காலத்தில் உதவும் சில பழங்களை பற்றி இங்கே காணலாம்.


ஆப்பிள்: ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்கவும், எடை இழப்புக்கும் நமக்கு உதவியாக இருக்கும். 


மாதுளை: மாதுளையில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இவை எடையைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.


தர்பூசணி: கோடையில் தர்பூசணிப்பழத்தை உட்கொள்வது எடையைக் குறைக்க உதவும். இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதன் மூலம் உடலில் நேரேற்றம் அதிகமாவதால், இதை உட்கொள்வது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 


முலாம்பழம்: முலாம்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும் இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது.


மாம்பழம்: இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் மூலம் உடலின் ஜீரண சக்தி அதிகரிப்பதுடன் இது எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.


மேலும் படிக்க | தண்ணி தான் ஆனாலும் வாங்கி குடித்துவிடாதீர்கள், அது விஷம்! எச்சரிக்கை


பப்பாளி: பப்பாளியில் உள்ள பப்பேன் எடை குறைப்பதில் உதவிகரமாக இருக்கும். இது மட்டுமின்றி தினமும் பப்பாளியை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். 


தர்பூசணி விதைகள்: தர்பூசணி விதைகளில் ஏராளமான புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதன் மூலம் செரிமானத்தை சீராக்க உதவி கிடைப்பதோடு உடல் எடையை குறைக்கவும் (Weight Loss) இது உதவும். 


உணவில் இந்த பழங்களைச் சேர்ப்பதன் மூலம், எடை இழப்புக்கு உதவி கிடைக்கும். ஆனால் அவற்றுடன் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கண் பார்வையை கூராக்க உதவும் 7 சூப்பர் உணவுகள் - கண்டிப்பாக சாப்பிடுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ