கண் பார்வையை கூராக்க உதவும் 7 சூப்பர் உணவுகள் - கண்டிப்பாக சாப்பிடுங்கள்!

கண் பார்வை என்பது ஒருவருக்கு மிகவும் அத்தியாவசியமானது. அந்த வகையில் சிலருக்கு கண் பார்வை அதன் கூர்மையை இழக்கும். அந்த வகையில், உங்களின் கண் பார்வையை கூராக்க இந்த 7 உணவுகள் உங்களுக்கு உதவும்.

  • May 03, 2024, 00:22 AM IST

இந்த உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொள்வது அதிக நன்மையை அளிக்கும். இருப்பினும், டிஜிட்டல் செயல்பாட்டை குறைத்துக்கொள்வதும் இதற்கு நன்மையளிக்கும்.

 

 

 

 

1 /7

முட்டை: இதில் உள்ள மஞ்சள் கருவில் லுடீன், ஜியாக்சாந்தின் மற்றும் கந்தகம் ஆகியவை உள்ளது. இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.  

2 /7

ஆரஞ்சு: வைட்டமிண் C இதில் அதிகம் இருக்கும் என்பதால் கண்களின் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக வைத்திருக்கும். கண்ணில் புரை விழுவதையும் இது தடுக்கும்.   

3 /7

கீரைகள்:  லுடீன், ஜியாக்சாந்தின் ஆகிய இரு ஆண்டிஆக்ஸிடன்ட்களும் இதில் இருப்பதால் தீங்கு விளைவிக்கும் லைட்களில் இருந்து இது காப்பாற்றும். வயதானவர்களுக்கு வரும் கண் பிரச்னைகளையும் இது தடுக்கும். 

4 /7

கேரட்: இதில் வைட்டமிண் ஏ எனப்படும் பீட்டா கரோட்டின் உள்ளது. இது நல்ல கண்பார்வைக்கு உதவும். 

5 /7

பாதாம்: வைட்டமிண் E இதில் அதிகம் இருக்கிறது. இதுவும் கண்களுக்கு நன்மை அளிக்கக்கூடியதாகும். 

6 /7

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: இதிலும் கேரட்டை போல் வைட்டமிண் ஏ எனப்படும் பீட்டா கரோட்டின் உள்ளது. இது கண்பார்வையை கூராக்கும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவல்கள் ஆகும். இதை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.