Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை படுத்தி வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. உடல் செயல்பாடற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக நாளுக்கு நாள் உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. கடந்த சில ஆண்டுகளில் உடனடியாக உண்ணக்கூடிய உணவுகள், அதாவது துரித உணவுகளின் பழக்கம் அதிகமாகியுள்ளது. இந்த உணவுகள் எளிதாக கிடைப்பதாலும் இவற்றை செய்ய அதிக நேரம் எடுக்காது என்பதாலும் இவை மிகவும் பிரபலமாகவும் ஆகி வருகின்றன. ஆனால், இவற்றில் சோடியம், கொழுப்பு ஆகியவை மிக அதிகமாக இருப்பதால் இவற்றால் பக்க விளைவுகளும் அதிகமாக ஏற்படுகின்றன. உடல் பருமன் அதிகரிக்க இந்த உணவுகள் மிகப்பெரிய காரணங்களாகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலர் உடல் எடையை குறைக்க ஜிம் செல்கிறார்கள், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அந்த எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து, கலோரிகளை எரித்து, உடல் எடையை குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்களில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் பானங்களுக்கு முக்கிய இடம் உள்ளது. ஆனால் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க, ஆரோக்கியமான பானங்கள் மட்டுமல்லாமல், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவும் அவசியம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். உடலில் சேரும் கொழுப்பைக் குறைக்க வீட்டிலேயே செய்து உட்கொள்ளக்கூடிய சில பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... பீர்க்கங்காயை குறைச்சு எடை போடாதீங்க...!


எடை இழப்பு பானங்கள் (Weight Loss Drinks)


எலுமிச்சை நீர்: ஆரோக்கியமான வழியில் நாளைத் தொடங்க எலுமிச்சை நீர் ஒரு சிறந்த வழியாகும். காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரைக் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இது உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. இது உங்கள் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பையும் எரிக்க உதவுகிறது.


க்ரீன் டீ: க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், தொப்பை கொழுப்பை கரைக்கவும் பெரிதும் உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் ஒரு கப் சூடான க்ரீன் டீ குடிப்பது, தொப்பையை விரைவாகக் குறைக்க எளிதான வழியாக இருக்கும்.


இஞ்சி டீ: செரிமான அமைப்பை மேம்படுத்தவும், உடல் பருமனை குறைக்கவும் உதவும் இஞ்சி டீயை பலர் விரும்பி குடிக்கின்றனர். இது உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கலோரிகளை குறைக்க உதவுகின்றது.  


சீரக நீர்: சீரகத்தில் பல வித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதில் கலோரிகள் குறைவாக உள்ளது. இது நச்சு நீக்கும் தன்மை கொண்டது. சீரகம் உடலில் இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்தி, கொழுப்பை குறைத்து வளர்சிதை மாற்றத்தை வேகமாகவும் சிறப்பாகவும் செய்கிறது. இதன் மூலம் வேகமாக எடை இழப்பு ஏற்படுகின்றது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கோடையில் எதை மறந்தாலும் என்னை மட்டும் மறக்காதீங்க: இப்படிக்கு இளநீர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ