ஒவர் வெயிட்டுக்கு ஒரே மாதத்தில் குட் பை சொல்ல இந்த ஜூஸ் குடிங்க போதும்

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க நாம் பல இயற்கையான எளிய வழிகளை பின்பற்றலாம். அப்படிப்பட்ட ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2024, 12:02 PM IST
  • கீரை மற்றும் கேரட் சாறு.
  • குடைமிளகாய் மற்றும் வெள்ளரிக்காய் சாறு.
  • முட்டைக்கோஸ் மற்றும் எலுமிச்சை சாறு.
ஒவர் வெயிட்டுக்கு ஒரே மாதத்தில் குட் பை சொல்ல இந்த ஜூஸ் குடிங்க போதும் title=

Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை படுத்தி வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. உடல் செயல்பாடற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக நாளுக்கு நாள் உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. கடந்த சில ஆண்டுகளில் உடனடியாக உண்ணக்கூடிய உணவுகள், அதாவது துரித உணவுகளின் பழக்கம் அதிகமாகியுள்ளது. இந்த உணவுகள் எளிதாக கிடைப்பதாலும் இவற்றை செய்ய அதிக நேரம் எடுக்காது என்பதாலும் இவை மிகவும் பிரபலமாகவும் ஆகி வருகின்றன. ஆனால், இவற்றில் சோடியம் கொழுப்பு ஆகியவை மிக அதிகமாக இருப்பதால் இவற்றால் பக்க விளைவுகளும் அதிகமாக ஏற்படுகின்றன. உடல் பருமன் அதிகரிக்க இந்த உணவுகள் மிகப்பெரிய காரணங்களாகின்றன.

நமது தவறான பழக்க வழக்கங்களால் உடலின் பல இடங்களில் கொழுப்பு சேர்ந்து விடுகிறது. தொப்பை, தொடை, இடுப்பு என சேரும் கொழுப்பை அகற்றுவது மிகப்பெரிய விஷயமாக உள்ளது. தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க முதலில் நாம் நமது உணவில் பல வித மாற்றங்களை செய்ய வேண்டும். நாம் தினசரி உட்கொள்ளும் உணவிலிருந்து துரித உணவுகளை உடனடியாக நீக்க வேண்டும். உணவில் ஆரோக்கியமான பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

உடல் எடையை குறைக்க (Weight Loss) நாம் பல இயற்கையான எளிய வழிகளை பின்பற்றலாம். அப்படிப்பட்ட ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். உடல் எடையை குறைக்க மிகவும் பயனளிக்கக்கூடிய சில சாறுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

எடை இழப்புக்கான காய்கறி சாறு (Vegetable Juices For Weight Loss)

பச்சை காய்கறிகள்: கீரை, கோஸ் போன்ற பச்சைக் காய்கறிகளுடன் வெள்ளரிக்காய், ஓமம் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால், எடை வேகமாக குறையும்.

கேரட், பீட்ரூட் சாறு: உடல் எடையை குறைக்க கேரட் மற்றும் பீட்ரூட் சாறு குடிக்கலாம். இது உங்கள் எடையை வேகமாக குறைக்கும். இதில் ஓமம், இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது இன்னும் சிறந்தது. இது உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றது. 

வெள்ளர்க்காய்: வெள்ளரி மற்றும் ஓமம் சேர்த்து சாறு செய்து உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இதில் கலோரி அளவு மிக குறைவாக உள்ளது. வெள்ளரி கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. 

மேலும் படிக்க | பாலாடைக்கட்டி சாப்பிட்டால் பிபி குறையும், எலும்பு வலு கூடும்..! இதோ மற்ற நன்மைகள்

தக்காளி சாறு: காலையில் தக்காளி சாறு உட்கொள்வது நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இது உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும். 

கீரை மற்றும் கேரட் சாறு:  கீரை மற்றும் கேரட் சேர்த்து ஜூஸ் செய்து உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது பீட்டா கரோட்டின் அளவை அதிகரிக்கிறது. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இது உதவியாக இருக்கும். 

முட்டைக்கோஸ் மற்றும் எலுமிச்சை சாறு: முட்டைக்கோஸ் மற்றும் எலுமிச்சை சாறு எடை இழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். முட்டைகோசில் உள்ள ஆரோக்கிய நன்மைகளும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற கூறுகளும் அதிக கலோரிகளை விரைவாக எரிக்க உதவும்.

குடைமிளகாய் மற்றும் வெள்ளரிக்காய் சாறு: குடைமிளகாய் மற்றும் வெள்ளரிக்காய் சாறு உடலின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இதில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது உடலை நன்கு நீரேற்றமாக வைத்திருக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இதன் காரணமாக நாம் ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ரத்தமும் இதயமும் நலமாக இருக்க... இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News