சர்க்கரை நோயாளிகள் மிஸ் பண்ணக் கூடாத ‘3’ காய்கறிகள்..!!
வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் சுகர் லெவலை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சில பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நிபுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நீரிழிவு நோய் என்பது ஒரு முறை ஏற்பட்டு விட்டால், அதனை குணப்படுத்த முடியாது. என்றாலும் அதனை உணவின் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் சுகர் லெவலை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சில பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நிபுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சில குறிப்பிட்ட உணவுகள் உடலில் இரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்கும் (Diabetic Control TIps). சர்க்கரை நோயாளிகள் கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய காய்கறிகளைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். இந்த காய்கறிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் காய்கறிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
பலாக்காய் (Raw Jackfruit)
கோடையில் நன்றாக கிடைக்கும் பலாக்காய் சாப்பிடுவதால், நீரிழிவு நோயாளிகள் (Diabetes) சர்க்க்ரையை சிறப்பாக கட்டுப்படுத்தலாம் . சர்க்கரை நோயாளிகளுக்கு சுவையுடன் கூடிய பலாக்காய் நன்மை பயக்கும். பலாக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் குளுக்கோஸ் வெளியிடப்படுவதை கட்டுப்பத்தி இன்சுலின் உணர்திரனை அதிகரிக்கிறது. பலாப்பழத்தால் பசியையும் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் இது நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக பலாப்பழத்தை சாப்பிட வேண்டும். எனினும் பலாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் அளவோடு தான் சாப்பிட வேண்டும்.
பாகற்காய் (Bitter Gourd)
சுவையில் கசப்பான சுவை கொண்டது பாகற்காய். ஆனால் பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தை போல செயல்படுகிறது. பாகற்காய் கோடைக் காலத்தில் மட்டுமல்ல எப்போதுமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் மட்டுமின்றி பல நோய்களையும் குணமாக்கும் ஆற்றல் பாகற்காயில் உள்ளது சத்துக்கள் உள்ளன. நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரையை எளிதில் கட்டுப்படுத்தலாம். பாகற்காயில் உள்ள வைட்டமின் ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் கண்பார்வை பிரச்சனைகளை சரிசெய்ய உதவியாக உள்ளது. பாகற்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
மேலும் படிக்க | சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பானங்கள் உதவும்: குடிச்சு பாருங்க!!
வெண்டைக்காய் ( Ladies Finger)
கோடைகால காய்கறிகளில் வெண்டைக்காயும் அடங்கும். லேடிஃபிங்கர் என அழைக்கப்படும் இந்த காய்கறி அனைவருக்கும் பிடிக்கும் காய்கறிகளில் ஒன்று. நீரிழிவு நோயாளிகளுக்கு லேடிஃபிங்கர் மிகவும் பயனுள்ள காய்கறியாகும். லேடிஃபிங்கர் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட அறிவுறுத்தப்படும் நிலையில், லேடிஃபிங்கரின் கிளைசெமிக் குறியீடு 20 என்ர அளவில் மிகவும் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மிகவும் நன்மை பயக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | பிபி முதல் செரிமானம் வரை... ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் துவரம் பருப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ