கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும் கருஞ்சீரகம், வேறு எந்தெந்த நோய்களுக்கு அருமருந்து தெரியுமா?
`இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது கருஞ்சீரகம்` என்று நபிகள் நாயகம் சொன்னது வேதவாக்காகக் கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில், கருஞ்சீரக எண்ணெயை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. நபிகள் நாயகத்தின் வாக்குக்கு ஏற்ப அரபு நாடுகளிலும் கருஞ்சீரகம் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.
"இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது கருஞ்சீரகம்" என்று நபிகள் நாயகம் சொன்னது வேதவாக்காகக் கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில், கருஞ்சீரக எண்ணெயை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. நபிகள் நாயகத்தின் வாக்குக்கு ஏற்ப அரபு நாடுகளிலும் கருஞ்சீரகம் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.
கருஞ்சீரகத்தில் இடம்பெற்றுள்ள தைமோகுவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று என்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமான அமினோ அமிலங்கள், அவசியமான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், பீடா-கரோடின், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் என பலவிதமான சத்துக்களையும் கொண்டுள்ளது.
நாள்பட்ட புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் கருஞ்சீரகம் குணப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, மனிதர்களின் நோய் எதிர்பாற்றல் முறைமையை கருஞ்சீரகம் வலுப்படுத்தும் என்றும் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.
Also Read | கமலஹாசனை தோற்கடிக்க, ஸ்மிருதி இரானியின் இந்த ஆட்டம் போதுமா?
கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது.
மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி (PCOD) எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் (Polycystic Ovary syndrome) பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும்.
கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும் அருமருந்து கருஞ்சீரகம். குழந்தைப் பிறந்த நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிட்டால், கர்ப்பப்பையில் இருக்கும் கசடுகள் சுத்தமாக வெளியேறிவிடும்.
Also Read | ஏராளமாய் நன்மைகளை அள்ளித் தரும் ஏலக்காயை பயன்படுத்தி பயன் பெறுவோம்
உடலில் ஏற்படும் வலியைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது கருஞ்சீரகம் . மழைக் காலம் மற்றும் பனிக் காலங்களில் உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுத்து உடல் வெப்பத்தை சீராக வைக்க உதவுகிறது கருஞ்சீரகம்.
சீரகத்தில் இருந்து தைமோக்யூனோன் (Thymoquinone) எனும் வேதிப்பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. இது, செரிமானக் கோளாறுகள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்றவற்றுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
Also Read | லாட்டரிக்கு பணம் கொடுக்காதவருக்கும் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த பெண்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR