பரோட்டா பிரியர்களுக்கு ஒரு பகீர் தகவல்! எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சும் மைதா!

மைதா கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றாலும், அதனை தயாரிக்கும் செயல்முறை முற்றிலும் வேறுபட்டது.
பரோட்டா என்பது அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடித்தமான உணவு என்றால் மிகையில்லை. அதிலும் இளைஞர்கள், குழந்தைகளுக்கு பரோட்டா குருமா இருந்தால் போதும். பரோட்டா என்னும் மைதா மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டி வகை வாய்க்கு மிகவும் சுவையானதாக இருந்தாலும், அவர் உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கிறது. மைதா மாவில், பரோட்டா தவிர பூரி, சமோசா ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது. அது தவிர பீட்ஸா, பர்கர், மோமோஸ், சில வகை பிஸ்கட் போன்றவற்றை தயாரிக்கவும் மைதா பயன்படுத்தப்படுகிறது. மிக சுவையான உணவுகளான இவற்றை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்.
மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், மைதா கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றாலும், அதனை தயாரிக்கும் செயல்முறை முற்றிலும் வேறுபட்டது. கோதுமை மாவு தயாரிக்கும் போது, கோதுமையின் மேல் உள்ள தவிடு அகற்றப்படுவதில்லை. இவை நம் உடலுக்கு மிக முக்கியமான நார்சத்தை அளிக்கிறது. ஆனால், மைதா மாவு தயாரிக்கும் போது நார்ச்சத்து முழுமையாக அதிலிருந்து அகற்றப்படும்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மைதா
டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், நார்ச்சத்து இல்லாத நிலையில், சாப்பிட உடன், அது குடலில் ஒட்டிக் கொள்கிறது. இதன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சினையும் ஏற்படக்கூடும். மேலும் இது அஜீரணத்திற்கும் காரணமாக அமைந்து விடும்.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சும் மைதா
மைதா மாவிலிருந்து தயாரிக்கும் போது, மாவின் அனைத்து புரதங்களும், நார் சத்துக்களும் அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக இது அமிலமாக செயல்படுகிறது. இது எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி இழுப்பதனால், இது எலும்புகளை பலவீனப்படுத்துகிறது.
மைதாவை உட்கொள்வதால் ஏற்படும் பிற பாதிப்புகள்
மைதாவில் அதிக அளவு மாவு சத்து உள்ளது, இதன் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கும் மற்றும் படிப்படியாக இரத்தத்தில் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்டின் அளவும் அதிகரிக்கத் தொடங்குகிறது. அதனால், நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், மைதாவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
அதிக அளவில் மைதா மாவு கேடு விளைவிக்கும்
மைதா மாவு அதிக அளவில் சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை மிகவும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக அதிக அளவில் குளுக்கோஸ் இரத்தத்தில் சேரத் தொடங்குகிறது. இது உடலில் ரசாயன எதிர்வினைகளை உருவாக்குகிறது. இதன் காரணமாக கீல்வாதம் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து உருவாகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ