பிரதமர் மோடிக்கு நன்றி என சஞ்சீவினியை தூக்கும் ஹனுமன் படத்துடன் பிரேசில் அதிபர் ட்வீட் ..!!
இரண்டு விமானங்கள், பிரேசில் மற்றும் மொராக்கோவிற்கு 20 லட்சம் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு மும்பை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டன.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளர்களில் ஒருவரான இந்தியா ஏற்கனவே பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கி அவர்களுக்கு உதவி செய்து வருகிறது.
போல்சனாரோ (Jair Bolsonaro) தனது ட்வீட்டில், பகவான் ஹனுமான் பகவான் 'சஞ்சிவினி மலையை' தூக்கிக் கொண்டு, இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு கொண்டு வருவதை படத்தை போட்டு நன்றி தெரிவித்துள்ளார். ராமாயணத்தில் போரில் காயமடைந்த ராமரின் சகோதரரான லக்ஷ்மணரை குணப்படுத்த ஹனுமன் மூலிகையை கொண்டு வர சென்ற போது, அவர் அந்த மலையையே பெயர்த்து எடுத்து வந்தார்.
"வணக்கம், உலகளாவிய நெருக்கடி நிலையை சமாளிக்க பிரேசில் (Brazil) எடுக்கும் முயற்சிகளில் இந்தியாவை பிரதமர் இணைந்து சிறந்த வகையில் உதவி செய்ததை பெருமையாக கருதுகிறேன். இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து எங்களுக்கு உதவியதற்கு நன்றி" என்று போல்சனாரோ ட்விட்டரில் தெரிவித்தார்.
இரண்டு விமானங்கள், பிரேசில் மற்றும் மொராக்கோவிற்கு 20 லட்சம் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு மும்பை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டன.
பூட்டான், மாலத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மானிய உதவியின் கீழ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு (Pakistan) இந்தியா தடுப்பூசிகளை அனுப்புகிறதா என்று கேட்டதற்கு, ஸ்ரீவாஸ்தவா, பாகிஸ்தானால் அரசு இது குறித்த கோரிக்கை எதுவும் அனுப்பியதாக தெரியவில்லை என்றார்.
புதன்கிழமை, இந்தியா 1,50,000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை பூட்டானுக்கும், 1,00,000 டோஸ் தடுப்பூசியை மாலத்தீவுக்கும் மானிய உதவியின் கீழ் அனுப்பியது.
இந்தியா (India) வியாழக்கிழமை 20 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை பங்களாதேஷுக்கும், 10 லட்சம் டோஸ் நேபாளத்திற்கும் மானிய உதவியின் கீழ் வழங்கியது, 15 லட்சம் டோஸ் மியான்மருக்கு அனுப்பப்பட்டது, 50,000 டோஸ் செஷெல்ஸுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது.
"உள்நாட்டு தேவைகளை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப இந்தியா தொடர்ந்து வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் கூட்டாளி நாடுகளுக்கு COVID-19 தடுப்பூசிகளை ஒவ்வொருரு கட்டமாக தொடர்ந்து வழங்கும். உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான அளவு தடுப்பூசி இருப்பதை உறுதி செய்யப்படும் " என ஸ்ரீவஸ்தவா கூறினார்.
ALSO READ | இந்தியாவிடம் COVID-19 தடுப்பூசி கோரும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ள கம்போடியா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR