இன்றைய கால கட்டத்தில் மார்பக புற்றுநோய் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிறது. நோயை முன்கூட்டியே ஆரம்ப நிலையில் கண்டறிவதால், சிகிச்சை அளிப்பது எளிதாகிறது. இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மொத்த புற்றுநோய் பாதிப்பில் 14 சதவிகிதம் மார்பக புற்றுநோய் என்றும் தரவுகள் கூறுகின்றன. இந்நிலையில், விழிப்புணர்வுடன் இருந்தால், மார்பக புற்று நோய் வந்தாலும், அதனை குணப்படுத்தி விடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்பக புற்றுநோய் ஏற்படக் காரணங்கள்


பல வகையான புற்றுநோய்களைப் போலவே, மார்பக புற்றுநோய்க்கான காரணமும் இன்னும் தெளிவாகவில்லை. ஆனாலும், மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை புற்றுநோய் வரக் காரணமாகின்றன என்பது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது. இதனுடன், கூந்தல் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பொருட்கள், சில அழகுசாதனப் பொருட்கள், சில டியோடரண்டுகள் ஆகியவற்றில் கலக்கப்படும் ஆபத்தான இரசாயனங்கள் இதற்கு காரணம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.


மார்பக புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள்


மார்பக புற்றுநோயை அதன் ஆரம்ப அறிகுறிகளால் அடையாளம் காண முடியும். புற்று நோய் பாதிப்பின் முதல் அல்லது இரண்டாவது கட்டத்தில் கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சரியான நேரத்தில் அளிக்கப்படும் சரியான சிகிச்சையின் உதவியுடன் (Health Tips) , மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.


மார்பகத்தில் கட்டி


மார்பகத்திலோ அல்லது மார்பகத்தைச் சுற்றியுள்ள பகுதியிலோ அல்லது அக்குள் பகுதியிலோ கட்டி இருப்பதை உணர்ந்தால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. எல்லா கட்டியும் புற்றுநோய் இல்லை என்பது உண்மைதான். ஆனால் மார்பகத்தில் கட்டி இருந்தால் அதை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. புற்றுநோய் கட்டிகள் பொதுவாக வலியை கொடுக்கக் கூடியது அல்ல என்றாலும்,அவை வளரும்போது வலியை உணரலாம்.


மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!


மார்பகம் அல்லது முலைக்காம்பு வடிவத்தில் மாற்றம்


இரண்டு மார்பகங்களின் அளவிலும் சிறிது வித்தியாசம் இருப்பது இயல்பு தான். ஆனால் மார்பகத்தில் அளவு அல்லது வடிவமைப்பில் அசாதாரண மாற்றம் தோன்றினால், அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தவிர, மார்பகம் சிவத்தல், மார்பகத்தில் அரிப்பு போன்றவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அதே போன்று முலைக்காம்பு உள்நோக்கி இருந்தாலோ, அதன் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தாலோ, அலட்சியமாக இருக்கக்கூடாது.


முலைகாம்புகளின் இருந்து பால் அல்லது திரவம் கசிதல்


குழந்தை பிறந்த பிறகு, முலைக்காம்புகளில் இருந்து பால் வெளியேறுவது இயல்பு. ஆனால், மற்ற பெண்களுக்கு முலைக்காம்புகளில் இருந்து பால் கசிவு இருந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில சமயங்களில் முலைக்காம்பிலிருந்து ரத்தம் கசியும். பிற வண்ண திரவங்களும் சில சமயங்களில் கசியலாம். இத்தகைய அறிகுறிகள் புற்றுநோயின் அறிகுறியாகக் கருதப்படுகின்றன. எனவே உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது


மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை


மார்பக புற்றுநோயைத் தடுப்பதில் தாய்ப்பால் அதிகம் கொடுப்பது உதவும். அதோடு சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான எடையை பராமரித்தல், ஆகியவை மார்பக புற்றுநோயை ஓரளவு தடுக்க உதவும். மது அருந்துபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, அளவோடு அருந்துவது நல்லது. இறைச்சிக்கு பதிலாக மீன்களை அதிகம் சாப்பிடுவதும் மார்பக புற்று நோயை தடுக்க உதவும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் ஏற்படாமல் இருக்க... செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ