இளம்பெண்களில் அதிகமாகும் மார்பக புற்றுநோய்: காரணம், அறிகுறிகள் என்ன?
Breast Cancer in Teenage Girls:இன்றைய காலகட்டத்தில் இளம் வயது பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன. இது மிகவும் அரிதான நிகழ்வுகளாக இருந்தாலும், இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
Breast Cancer in Teenage Girls: சமீப காலங்களில் பெண்களை அதிகமாக பாதித்துவரும் உயிர்கொல்லி நோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று. இது ஒரு தீவிரமான மற்றும் ஆபத்தான நோயாகும். மார்பக புற்றுநோய் பெரும்பாலும் வயதான பெண்களைப் பாதிக்கிறது. எனினும், சமீக காலங்களில் இதற்கு மாறான போக்கு காணப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் இளம் வயது பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் (Breast Cancer) வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன. இது மிகவும் அரிதான நிகழ்வுகளாக இருந்தாலும், இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிய, இதற்கான அறிகுறிகள் பற்றிய முழுமையான புரிதலும் தெளிவும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஆரம்ப கட்டத்திலேயே அதன் அறிகுறிகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியம்.
Breast Cancer Reasons: பதின்ம வயது பெண்களில் மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
- குடும்பத்தில் உள்ள பெண்கள் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால், பதின்வயதினருக்கும் (Teenage Girls) இந்த நோய் வருவதற்கான ஆபத்து சற்று அதிகரிக்கிறது.
- சில மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களால் மார்பக புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கலாம்.
- இளம் வயது பெண்கள் சில வகையான கதிர்வீச்சுக்கு ஆளானாலும் இந்த ஆபத்து அதிகரிக்கலாம்.
- உடல் பருமன் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் ஒரு காரணியாக கருதப்படுவதாக சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Breast Cancer Symptoms: இள வயது பெண்களில் காணப்படும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள்
- மார்பகத்தில் ஏதேனும் கட்டி அல்லது வீக்கம் இருப்பது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
- இந்த கட்டி சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம்.
- இந்த கட்டியால் வலி ஏற்படலாம், அல்லது வலி இல்லாத கட்டிகளாகவும் இவை இருக்கலாம்.
- முலைக்காம்பில் இருந்து ரத்தம், மஞ்சள் அல்லது பழுப்பு நிற வெளியேற்றம் வந்தால், அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
- மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் ஏதேனும் மாற்றம் காணப்பட்டால், அதை மார்பக புற்றுநோயின் அறிகுறியாக கருத வேண்டும்.
- மார்பகத்தின் தோலில் சிவத்தல், மார்பகத்தில் வீக்கம் அல்லது குழிகள் உருவாவதும் மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
மேலும் படிக்க | மூளை வளர்ச்சியை பாதிக்கும் விட்டமின் B12 குறைபாடு... தவிர்க்க உதவும் சில பழங்கள்
Breast Cancer Preventive Measures: மார்பக புற்றுநோய்: வராமல் காப்பது எப்படி?
- சமச்சீரான உணவை உட்கொள்வது நல்லது.
= அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் உட்கொள்ள வேண்டும்.
- மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம்.
- தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
- எடை அதிகரிக்காமல் ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும்.
- மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
- தவறாமல் அவ்வப்போது மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இதய ஆரோக்கியம் முதல் உடல் பருமன் வரை... முளை கட்டிய தானியங்களை மிஸ் பண்ணாதீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ