மூளை வளர்ச்சியை பாதிக்கும் விட்டமின் B12 குறைபாடு... தவிர்க்க உதவும் சில பழங்கள்

வைட்டமின் B12 ஊட்டச்சத்து மூளையின் சரியான செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இது தவிர இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் வைட்டமின் பி 12 குறைபாடு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

உடல் சிறப்பாகவும் சீராகவும் செயல்பட ஒவ்வொரு வகையான வைட்டமின்களும் தேவை. அவற்றில் ஒன்று வைட்டமின் பி12 ஆகும். அதன் குறைபாட்டால், உடலின் நரம்புகள் பலவீனமடைந்து, மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, உடல் நோய்களின் கூடாரமாகி விடும்.

1 /8

உடல் சிறப்பாகவும் சீராகவும் செயல்பட மிகவும் தேவையான விட்டமின்களில் ஒன்று வைட்டமின் பி 12 ஆகும். மருத்துவ மொழியில், வைட்டமின் பி12 ஊட்டசத்து சயனோகோபாலமின் என்று அழைக்கப்படுகிறது. இதன் குறைபாடு மூளை, நரம்பு ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படாமல் இருக்கவும், குறைபாட்டைப் போக்கவும் உதவும் சில பழங்களை அறிந்து கொள்ளலாம்.

2 /8

ஆரஞ்சு:  ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்துடன், வைட்டமின் பி 12 சத்தும் அதிகம் உள்ளது. மேலும், இதில் பீட்டா கரோட்டின், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது.

3 /8

4 /8

ஆப்பிள் - ஆப்பிள் பழத்தை தினமும் சாப்பிட்டால் நோய்கள் அண்டாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆப்பிளில் நல்ல அளவு வைட்டமின் பி12 இருப்பதால் இதனை தவறாமல் சேர்த்துக் கொள்வது நல்லது.

5 /8

அவுரிநெல்லி: வைட்டமின் பி12 நிறைந்த ப்ளூபெர்ரி என்னும் அவுரிநெல்லிகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இப்பழத்தை உட்கொள்வதன் மூலம் செரிமானமும் சிறப்பாக இருக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தையும் குறைக்கிறது மற்றும் எடையைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

6 /8

கிவி:  நடுத்தர அளவிலான கிவியில் 0. 1mcg வைட்டமின் பி12 உள்ளது என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தப் பழத்தில் வைட்டமின் பி12 ஊட்டச்சத்தை தவிர,  இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், ஜிங்க், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் சி போன்றவையும் ஏராளமாக உள்ளன.

7 /8

வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்: சருமம் வெளிறுதல், நாக்கு சிவத்தல், வாயில் புண்கள், சருமத்தில் குத்தும் உணர்வு, நடக்கும்போது சமநிலை இழப்பு, கை மற்றும் கால்களில் உணர்வின்மை, மறதி, மனச்சோர்வு, திடீர் எடை இழப்பு, பார்வை குறைபாடு, சோர்வு, தலைவலி, மயக்கம், வாந்தி முதலியன வைட்டமின் பி-12 குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம்.

8 /8

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)