Buffalo milk health benefits: எருமை பாலில் பசுவின் பாலை விட கால்சியம் மற்றும் புரதம் அதிகம் உள்ளது. ஆரோக்கியமான எலும்புகள், பல் ஆரோக்கியம் மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு எருமை பால் சிறந்தது. புரோட்டீன் மற்றும் கொழுப்புச்சத்து மிகுந்த எருமை மாட்டுப்பால் நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைப் பயக்கின்றது. எனவே எருமை மாட்டுப்பாலில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்று இங்கே பார்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

* எருமைப்பாலில் (Buffalo Milk) புரதச்சத்து நிறைந்துள்ளது: உடல் தசைகள் வலுவடையவும், ஆணழகனாகவும் மாற விரும்பும் இளைஞர்கள், அதிகப் புரதச்சத்து நிறைந்த எருமைப்பாலை தினமும் பருகுவது நல்ல பலனைத் தரும். அதேபோல உடலில் உள்ள என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் செயல்பாட்டிற்கும் எருமைப்பால் சிறந்தது.


ALSO READ | பால் குடிப்பதால் நன்மைகள் மட்டுமல்ல, சிலருக்கு பாதிப்புகளும் உண்டு


* எருமைப்பால் இதய ஆரோக்கியமானது: எருமைப்பால் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிக மிக உகந்தது. ஒரு டம்ளர் எருமைப்பாலில் 412.4 கிராம் கால்சியம் உள்ளது. இந்த கால்சியம், ரத்த அழுத்தத்தை சமன்செய்து, இதயத்திற்கு ரத்தம் சீராகப் பாய்வதை உறுதி செய்கிறது.


* எருமைப்பாலில் எலும்புகள் வலிமை ஆகும்: எருமைப்பாலில் மெக்னீஷியம், துத்தநாகம் , பாஸ்பரஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருப்பதால், எலும்பை வலுவடையச் செய்கிறது. மேலும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும் அரணாகச் செயல்படுகிறது.


* எருமைப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்: எருமைப்பாலில் நிறைந்துள்ள வைட்டமின் A, வைட்டமின் C ஆகியவை நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி உடலை நோய்கள் அண்ட விடாமல் தடுக்கின்றன.மேலும் இவ்விரு வைட்டமின்களும், மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடென்டுகளாக செயல்பட்டு, உடலை சுத்தப்படுத்துகிறது.


* எருமைப்பால் எடை அதிகரிக்க உதவும்: எடை அதிகரிக்க விரும்புபவர்கள் எருமை பாலை உட்கொள்ளலாம். ஏனெனில் இதில் உள்ள கலோரிகளின் அளவு மிக அதிகமாக உள்ளது மேலும் இது உங்கள் உடலின் ஆற்றலையும் வேகமாக அதிகரிக்கிறது.


ALSO READ | Health News: இந்த உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படும், ஜாக்கிரதை!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR