தொங்கும் தொப்பையால் அவதியா? இதை செய்தால் 30 நாட்களில் ஸ்லிம்மாகலாம்
Reduce Belly Fat: அடிவயிற்றில் தொங்கும் தொப்பையால் பலர் சங்கடமாக உணர்வார்கள். அத்தகைய சில குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு கொண்டு வந்துள்ளோம், இதைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு மாதத்தில் தொப்பையை எளிதாகக் குறைக்கலாம்.
தொப்பையை குறைப்பது எப்படி: நம்மில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறோம். உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதிகரிக்கும் எடையைக் குறைக்க நம்மில் பலர் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறோம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும், விரும்பிய பலனை அடைய முடிவதில்லை. அடிவயிற்றில் தொங்கும் தொப்பையால் பலர் சங்கடமாக உணர்வார்கள். அத்தகைய சில குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு கொண்டு வந்துள்ளோம், இதைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு மாதத்தில் தொப்பையை எளிதாகக் குறைக்கலாம்.
இந்த வழிகளில் தொப்பையை குறைக்கலாம்
நடனமாடுவதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்
தொப்பை கொழுப்பு என்பது மக்களை மிகவும் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சனை. தொப்பை கொழுப்பு என்பது உங்கள் இடுப்பைச் சுற்றி சேமித்து இருக்கும் கொழுப்பாகும். அதன்படி ஒரே மாதத்தில் தொப்பையை குறைக்க நினைத்தால் தினமும் ஒரு மணி நேரம் நடனமாடலாம், இதைச் செய்வதன் மூலம் உங்கள் முழு உடலும் உடற்பயிற்சி செய்யப்பட்டும், மேலும் பாடாய் படுத்தும் பெல்லி கொழுப்பி ஒரேடியாக கரைத்துவிடலாம்.
மேலும் படிக்க | எண்ணெய் குளியல் எப்போது குளிக்கணும்..! இதை தெரிஞ்சுக்கோங்க..
தினமும் சைக்கிள் செய்யவும்
ஜிம்முக்கு போகாமலேயே தொப்பையை குறைக்க வேண்டும் என்றால், கோனா சைக்கிள் ஓட்டலாம், இது உங்கள் தொப்பை சில நாட்களில் வெண்ணெய் போல் கரைந்துவிடும். இந்த உடற்பயிற்சியை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
தினமும் க்ரஞ்சஸ் செய்யுங்கள்
தொப்பை கொழுப்பைக் குறைக்க க்ரஞ்ச் மிகவும் பயனுள்ள உடற்பயிற்சி ஆகும். தொப்பையை குறைப்பது பற்றி பேசும் போது க்ரஞ்சஸ் உடற்பயிற்சி தான் முதலிடத்தில் உள்ளது அதனால் தான் இந்த பயிற்சியை தினமும் செய்ய வேண்டும்.
உடல் பருமனை குறைக்க இந்த 3 பானத்தை குடிக்கலாம்
எலுமிச்சை - இஞ்சி
எலுமிச்சம்பழங்களில் இருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும். அவற்றின் தோலை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, அத்துடன் அரை டீஸ்பூன் மிளகு தூள் மற்றும் ஒரு அங்குல இஞ்சி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின் அதனை வடிகட்டி அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடல் பருமனை மிக விரைவாக குறைக்கலாம்.
சீரகம் - இலவங்கப்பட்டை
ஒரு லிட்டர் தண்ணீரில் 3 டீஸ்பூன் சீரகம் மற்றும் 3 இன்ச் இலவங்கப்பட்டையை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து பின் வடிகட்டவும். இதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து குடித்தால் 10 நாட்களில் வித்தியாசத்தை உணரலாம்.
சியா விதைகள் - எலுமிச்சை
2 டீஸ்பூன் சியா விதைகளை ஒரு கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமனை விரைவாக குறைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உங்கள் கால்களை பலவீனமாக்கும் ‘சில’ ஆபத்தான பழக்கங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ