எலும்புகளை சல்லடையாக்கும் வைட்டமின் டி குறைபாடு.... ஈடு செய்ய உணவில் சேர்க்க வேண்டியவை
கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைவதோடு, சல்லடையாக துளைக்கப்படுகிறது. இதன் காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் என்னும், எலும்பு மெலிதல் நோய் மற்றும் எலும்பு முறிவு ஆபத்து அதிகரிக்கிறது.
இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, இளம் வயதிலேயே எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. கால்சியம் சத்து எலும்புகளை வலுவாக்கும். எனினும் இந்த கால்ஷியம் சத்து உடலில் சேர உடலில் வைட்டமின் டி சத்து அவசியம். இந்த சத்துக்கள் குறைபாடு ஏற்படும் போது, உடலில் உள்ள எலும்புகள் உடலுக்கு தேவையான கால்ஷியம் சத்தை ஈடுசெய்கிறது. இதன் காரணமாக, எலும்புகள் பலவீனமடைவதோடு, சல்லடையாக துளைக்கப்படுகிறது, இதன் காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்னும், எலும்பு மெலிதல் நோய் மற்றும் எலும்பு முறிவு ஆபத்து அதிகரிக்கிறது.
வயது அதிகமாகும் போது பொதுவாக ஏற்படும் எலும்பு தேய்மானத்தைத் தடுக்க உடலுக்கு தினமும் சுமார் 1,200 மி.கி கால்சியம் தேவைப்படுகிறது. ஆனால் வளரும் குழந்தைகள் குறிப்பாக 9 முதல் 18 வயது வரை உள்ளவர்கள், தினமும் 1,300 மி.கி கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், இந்த ஊட்டச்சத்தை உடல் உறிஞ்ச முடியாத நிலை உண்டாகும். இதனால் சாப்பிடும் உணவுகளில் இருந்து கால்ஷியம் சத்தை பெற முடியாது
வலுவான எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் டி ஊட்டச்சத்து
வைட்டமின் டி இல்லாமல், உணவுகளில் இருந்து கால்சியத்தை உடலால் உறிஞ்ச முடியாது. இதனால் எலும்புகள் (Health Tips) பலவீனமடைகின்றன. அதுமட்டுமின்றி, உடலில் புதிய எலும்புகள் உருவாகுவதையும் தடுக்கிறது. இரத்தப் பரிசோதனையின் மூலம் உங்கள் உடலில் வைட்டமின் டி அளவை அறியலாம். பெரியவர்களுக்கு வைட்டமின் டி அளவு 20 ng/mL க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க வேண்டும். இந்நிலையில், வைட்டமின் டி ஊட்டச்சத்து 12 ng/ml க்கும் குறைவாக இருந்தால், உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்
1. சோர்வு மற்றும் பலவீனம்
2. எலும்புகள் மற்றும் தசைகளில் வலி
3. நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை
4. மன ஆரோக்கியம் பாதிப்பு
5. உடலில் காயங்கள் குணமாக அதிக நேரம் எடுத்து கொள்ளும் நிலை
மேலும் படிக்க | சர்க்கரை நோய் - இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும் சில உணவுகள்... எச்சரிக்கும் ICMR
வைட்டமின் டி குறைபாட்டை தடுக்க செய்ய வேண்டியவை
வைட்டமின் டி ஊட்டச்சத்தின் இயற்கையான ஆதாரம் சூரிய ஒளி. காலையில் 10-15 நிமிடம் சூரிய ஒளியில் இருப்பதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்கலாம். இது தவிர, வைட்டமின் டி ஊட்டச்சத்தினால் வலுவூட்டப்பட்ட பால், சோயா, காளான், முட்டை போன்றவற்றையும் உட்கொள்ளலாம்.
எலும்புகள் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் நிறைந்த சில உணவுகள்
நமது எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இது தவிர, கால்சியம் நமது உடலின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்ஷியம் குறைபாடு ஏற்படாமல் இருக்க எள் அல்லது எள்ளு, பால், குறைந்த கொழுப்பு தயிர், சியா விதைகள், ப்ரோக்கோலி, மீன் உணவுகள், கீரை ஆகியவற்றை எடுத்துக் கொள்வது பலன் தரும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மாரடைப்பு வராமல் காக்கும் சூப்பர் உணவுகள்: மருத்துவரே பகிர்ந்த தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ