புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்று உலக அளவில் அனைவரின் இயல்பான வாழ்க்கையையும் பாதித்திருக்கிறது.  பாதிப்பு இல்லாதவர்களும், கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. அதோடு, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில், நோய்த்தொற்று இல்லாதவர்கள், தொற்று பாதிப்பு உள்ளவர்களை கவனிக்கும்போது கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.  அவற்றில் அடிப்படையான சிலவற்றைத் தெரிந்துக் கொள்வோம்.
மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களும், அறிகுறி இல்லாமல் கொரோனா பாதித்தவர்களும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் என்ன தெரியுமா?
முதலில் நோயாளிகளை கவனிப்பவர்களுக்கான அறிவுறுத்தல்களைத் தெரிந்துக் கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Read Also | JULY 30: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்


மூன்றடுக்கு முகக் கவசம் அணிய வேண்டும். நோயாளியின் அறையை சுத்தம் செய்யும்போதும், அவர்கள் பயன்படுத்திய இடங்களை தொடும்போதும், அவர்களுடைய துணிகளை கையாளும்போதும், ஒற்றை பயன்பாட்டு கையுறைகளை பயன்படுத்த வேண்டும்.
கையுறைகளை அணிவதற்கு முன்பும், அவற்றை அகற்றிய பிறகும் கைகளை நன்றாக சுத்தம் செய்யவும்.
பயன்படுத்திய முகக் கவசங்கள், உணவு பாக்கெட்டுகள் உட்பட அனைத்துவித கழிவுகளையும் கவனமாக அகற்ற வேண்டும்..
நோயாளியின் உடலில் இருந்து வெளியாகும் திரவங்களுடன் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும். நோயாளியை கையாளும்போது ஒற்றை பயன்பாட்டு கையுறைகளைப் பயன்படுத்தவும்.
நோயாளி பயன்படுத்திய பாத்திரங்கள், உணவுகள், குளிர்பானங்கள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும்.
நோயாளிக்கு அவரது அறையிலேயே உணவு கொடுக்க வேண்டும்.
நோயாளி பயன்படுத்திய பாத்திரஙக்ளை, டிடர்ஜெண்ட், சோப்பு மற்று மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யும் போது கையுறைகளை அணைந்துக் கொள்ளவும்.