காலிஃபிளவர் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்க கூடிய, விரும்பி உண்ணப்படும்  ஒரு காய்கறி. தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவுகளில், இது பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. இதனை சமைப்பதும் மிகவும் எளிது. இதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், குறிப்பிட்ட சில உடல நல பிரச்சனைகள் உள்ளவர்கள், அளவுக்கு மிஞ்சிய அளவில் இதனை உட்கொண்டால், பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தில்லிக்கு அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவின் ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ், சில பிரச்சனைகள் உள்ளவர்கள் காலிபிளவரை அதிகமாக சாப்பிடக்கூடாது, முடிந்த வரை தவிர்க்க வேண்டும்  என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிஃபிளவரை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்


காலிஃபிளவர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் பல ஊட்டச்சத்துக்கள்  நிறைந்து உள்ளன. அவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  காலிஃபிளவரில் போதுமான அளவு புரதம், கார்போஹைட்ரேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் என பலவித சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை காலிஃபிளவரில் உள்ளன. ஆனால் அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல.


மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!


1. தைராய்டு பிரச்சனை
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், காலிஃபிளவர் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இது T3 மற்றும் T4 ஹார்மோன்களின் சுரப்பை காலிபிளவர் அதிகரிக்கிறது. இது தைராய்டு நோயாளிகளுக்கு நல்லதல்ல.


2. வயிற்றில் வாயு


காலிஃபிளவரில் ராஃபினோஸ் என்ற தனிமம் உள்ளது. இது ஒரு வகையான கார்போஹைட்ரேட் ஆகும், இதனை நம் உடல் இயற்கையாக உடைக்க முடியாமல் இருப்பதால், சிறுகுடல் வழியாக பெரிய குடலை சென்றடைகிறது. இதன் காரணமாக வயிற்றில் வாயு பிரச்சனை எழத் தொடங்குகிறது.


3. இரத்தம் கெட்டியாகும்


காலிஃபிளவர் பொட்டாசியத்தின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது, எனவே அதை அதிகமாக உட்கொள்பவர்களின் இரத்தம் படிப்படியாக கெட்டியாகத் தொடங்குகிறது. மாரடைப்பு ஏற்பட்ட பலர் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்கின்றனர், எனவே காலிஃபிளவரை அதிகம் உட்கொள்வது அவர்களுக்கு ஆபத்தானது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ