Migraine: ஒற்றைத் தலைவலி பாடாய் படுத்துகிறதா... காரணங்களும்... தீர்வுகளும்..!
Migraine Headache: ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நரம்பியல் சார்ந்த பிரச்சனை. மூளையின் சில பகுதிகள் அதிவேகமாக செயல்படுவதன் காரணமாக கடுமையான தலைவலி ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலியின் போது, மூளையில் உள்ள நரம்புகள் விரிவடைந்து, கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன.
Migraine Headache: ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நரம்பியல் சார்ந்த பிரச்சனை. மூளையின் சில பகுதிகள் அதிவேகமாக செயல்படுவதன் காரணமாக கடுமையான தலைவலி ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலியின் போது, மூளையில் உள்ள நரம்புகள் விரிவடைந்து, கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன. ஒற்றைத் தலைவலி வந்தால் நெற்றியின் இரண்டு பக்கமும் துடிப்பது போன்ற உணர்வு இருக்கும். முதலில் லேசாகத் தொடங்கும் இந்த வலி, கடுமையான வலியாக மாறும். ஒற்றை தலைவலி, சில மணி நேரம் முதல், இரண்டு நாட்கள் வரை கூட இது நீடிக்கும்.
ஒற்றை தலைவலிக்கான காரணங்கள்
மன அழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட பல காரணங்களால், மைக்ரேன் தலைவலி ஏற்படுகின்றன. கடும் கோடையின் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். மைக்ரேன் வலியின் அறிகுறிகள் என்ன என்பதையும், ஆயுர்வேதத்தில் அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதையும் நிபுணர்களிடம் இருந்து தெரிந்துகொள்வோம்.
மைக்ரேன் தலைவலி அறிகுறிகள்
1. தலையின் கடுமையான வலி இருக்கும். சில சமயங்களில் பின் மண்டை, கழுத்து என வலி பரவும்.
2. தலைவலி காரணமாக வாந்தி, குமட்டல் உணர்வு அதிகம் இருக்கும்.
3. உரத்த சத்தம் மற்றும் பிரகாசமான விளக்குகள், ஆகியவற்றை தாங்கி கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
4. மைக்ரேன் வலியால் பார்வை திறனில் சில சமயங்களில் தற்காலிக பாதிப்பு ஏற்படும்.
5. கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு இருக்கலாம்.
6. ஒற்றைத் தலைவலி சில மணிநேரங்கள் முதல் இரண்டு நாட்கள் வரை கூட நீடிக்கும்.
7. ஒற்றைத் தலைவலியின் வலி கடுமையாக இருக்கும். இது சாதாரண தலைவலியிலிருந்து வேறுபட்டது.
ஒற்றைத் தலைவலி ஏற்படாமல் தடுக்கும் முறை
மன அழுத்தம்:
ஒற்றைத் தலைவலியைத் தடுக்க, மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மிக அவசியம். மன அழுத்தத்தைக் குறைக்க, யோகா, உடற்பயிற்சி மற்றும் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் செய்வதன் மூலம் ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்கலாம்.
மேலும் படிக்க | மதியம் சாப்பிட பிறகு செய்யக்கூடாத 5 முக்கியமான விஷயங்கள்!
போதுமான தூக்கம்:
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான எளிதான வழியாகும். தூக்கமின்மை ஒற்றைத் தலைவலி பிரச்சனையை அதிகரிக்கும். தினமும் 7-8 மணிநேரம் நன்றாக தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
அதிகளவு தண்ணீர் அருந்துதல்:
அதிக தண்ணீரை உட்கொள்வது ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சையளிப்பதற்கான எளிதான வழியாகும். நீரிழப்பு ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியமான உணவு:
ஒற்றைத் தலைவலியைத் தடுக்க, புதிய பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உட்கொள்வது அவசியம். ஆரோக்கியமான கொழுப்பு அமிலம் நிரைந்த உலர் பழங்கள் குறிப்பாக பாதாம் பருப்புகளை உட்கொண்டால், ஒற்றை தலைவலி ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்தல்:
துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதால், செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு ஒற்றைத் தலைவலி ஏற்படும். இவற்றால் உடல் எடையும் கூடும்.
ஒற்றை தலைவலி சில வீட்டு வைத்தியங்கள்
1. சில மூலிகைகளை உட்கொள்வதன் மூலம் இந்த வலியிலிருந்து விடுபடலாம். பிராமி மற்றும் அஸ்வகந்தாவை உட்கொள்வதன் மூலம் இந்த வலியின் அறிகுறிகளைக் குறைக்கலாம். இந்த இரண்டு மூலிகைகளும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது.
2. இஞ்சி மற்றும் துளசி ஆகியவையும் ஒற்றை தலைவலியை போக்க உதவும். இந்த இரண்டு மூலிகைகளும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | Raw Banana: நீரிழிவு முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் வாழைக்காய்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ