மதியம் சாப்பிட பிறகு செய்யக்கூடாத 5 முக்கியமான விஷயங்கள்!

மதிய உணவை சாப்பிட பிறகு சிறிது ஓய்வெடுக்க விரும்புவது இயல்பானது. இருப்பினும், சாப்பிட்ட பிறகு நல்ல செரிமானம் அடைய சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். 

மதிய உணவை சாப்பிட பிறகு சிறிது ஓய்வெடுக்க விரும்புவது இயல்பானது. இருப்பினும், சாப்பிட்ட பிறகு நல்ல செரிமானம் அடைய சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். 

 

1 /5

இனிப்பு: எப்போதாவது இனிப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது என்றாலும், சாப்பிட்ட உடனேயே இனிப்புகளை எடுப்பது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். 

2 /5

புகைபிடித்தல்: புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். புகைபிடித்தல் வயிற்று அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கலாம். புகைபிடிக்க வேண்டும் என்றால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 1-2 மணிநேரம் காத்திருப்பது நல்லது.

3 /5

குளிர் பானங்கள்: மதியம் சாப்பிட உடன் குளிர் பானங்களை குடிக்க கூடாது. இந்த குளிர் பானங்கள் உங்கள் வயிற்றில் உள்ள இரத்த நாளங்களை கட்டுப்படுத்தலாம். எனவே அவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

4 /5

தூக்கம்: சாப்பிட பிறகு தூக்கம் வருவது இயல்பு தான். அனால் அது செரிமான செயல்முறைக்கு எதிராக வேலை செய்யும். சாப்பிட பிறகு தூக்கம் வந்தால் படுப்பதற்குப் பதிலாக நிமிர்ந்து உட்கார்ந்து அல்லது நடக்க முயற்சிக்கவும்.

5 /5

உடற்பயிற்சி: சாப்பிட்ட பிறகு உடனடியாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட கூடாது, இது செரிமானத்தை கடுமையாக பாதிக்கும்.  உடற்பயிற்சியில் ஈடுபட சாப்பிட்ட பிறகு 2 முதல் 3 மணி நேர இடைவேளி அவசியம்.