அதிக கொலஸ்ட்ரால் அளவு ஒரு தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது. உடலின் சரியான செயல்பாட்டிற்கு இது அவசியமாகும், ஆனால் அதன் அதிகப்படியான அளவு நம் உடல் ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும். பொதுவாக கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் மெழுகு போன்ற ஒரு பொருளாகும். சில சமயம் இது ரத்தத்தில் ஒட்டிக்கொண்டு ரத்த நாளங்களை அடைத்துவிடும். இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதால் இரத்த ஓட்டம் குறைகிறது, இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இரத்த ஓட்டத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே இதய நோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உங்கள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது முக்கியமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் என்ன? உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் வியர்வை, சோர்வு, பலவீனம், பசியின்மை போன்ற பல அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கலாம். இது தவிர, இதுபோன்ற சில அறிகுறிகளும் உள்ளன, அவை உங்கள் கண்களில் அல்லது அதைச் சுற்றிலும் தோன்றலாம். அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க 


சாந்தெலஸ்மா: கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது கண்களுடன் தொடர்புடைய முதல் அறிகுறிகள் சாந்தெலஸ்மா (கொலஸ்ட்ரால் உள்ளிட்ட இயற்கை கொழுப்புகள், கண் இமைகளைச் சுற்றி நன்கு வட்டமிடப்பட்ட தட்டையான அல்லது சற்று உயர்ந்த மஞ்சள் நிற வளர்ச்சியை உருவாக்கலாம், இது சாந்தெலஸ்மா என அழைக்கப்படுகிறது) ஆகும். இந்த நிலை கண்களைச் சுற்றி மஞ்சள் நிறத்தை ஏற்படுத்தும். இது தோலின் கீழ் படிந்திருக்கும் கொலஸ்ட்ரால் காரணத்தால் ஏற்படுகிறது. இந்த நிலை அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு ஏற்படும் என நம்பப்படுகிறது.


முதிர் வளையம்: கண்ணின் முன் பகுதியைச் சுற்றி நீலம், வெள்ளை அல்லது வெளிர் சாம்பல் நிற வளையங்கள் உருவாகும் நிலை இதுவாகும். இந்த நிலை கார்னியாவின் மேல் அல்லது கீழ் பகுதியில் தொடங்கி காலப்போக்கில் மோசமாகிவிடும்.


மூன்றாவது அறிகுறி: இது கண்களின் இரத்த நாளங்கள் தடுக்கப்படும் ஒரு நிலை மற்றும் இது பல தீவிர பார்வை பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த நிலையை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.


கொலஸ்ட்ராலைக் குறைக்க பீன்ஸ் நன்மை பயக்கும்
2021 இல் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பலவகையான பருப்பு வகைகளை சாப்பிடுவது நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். எனவே உங்கள் உணவில் பீன்ஸை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள். இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.


பீன்ஸ் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் குறையும்
பீன்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. ஆய்வில் இது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. செரிமான மண்டலத்தில் நார்ச்சத்து இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பை உறிஞ்சுவதை குறைக்க உதவுகிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நீரழிவு நோயாளிகள் இந்த காய்கறிகளை மட்டும் தவறாமல் சாப்பிடுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ